For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீன் தூண்டிலில் ஒயின் பரிமாறும் கலாச்சாரம்.. ஊரடங்கிற்கு இடையே வெனிசுலாவில் பரவும் செம பழக்கம்!

வெனிசுலாவில் ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து ஒயின் பரிமாறிக்கொள்ளும் பழக்கம் வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

கராக்கஸ்: வெனிசுலாவில் ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து ஒயின் பரிமாறிக்கொள்ளும் பழக்கம் வைரலாகி உள்ளது.

உலக நாடுகளை போல வெனிசுலாவிலும் தற்போது தீவிரமாக கொரோனா பரவி வருகிறது. அங்கு தற்போது 500 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெனிசுலாவிலும் மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு மார்ச் இரண்டாம் வாரத்தில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் தங்கள் ஓய்வு நேரத்தை மக்கள் மிக சிறப்பாக கழித்து வருகிறார்கள். இந்த ஊரடங்கு அப்பகுதி மக்கள் இடையே புதிய உறவை ஏற்படுத்தி உள்ளது.

வேளாண் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்த விவசாயிகள்... நிதி அமைச்சர் உரையில் இடம்பெறாத அறிவிப்புகள்வேளாண் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்த விவசாயிகள்... நிதி அமைச்சர் உரையில் இடம்பெறாத அறிவிப்புகள்

ஒயின் பகிர்வு

ஒயின் பகிர்வு

அண்டை வீட்டாருக்கு இடையே ஒயினை பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரத்தை இது அங்கு ஏற்படுத்தி உள்ளது. வெனிசுலாவில் கராக்கஸ் பகுதியில் உள்ள எல் அவிலா மலைக்கு அருகே இருக்கும் லாஸ் பலோஸ் நகரத்தில்தான் இந்த வழக்கம் முதலில் தொடங்கியது. அங்கு இருக்கும் வீடுகளில் உள்ள மக்கள் அண்டை வீட்டில் இருக்கும் மக்களுக்கு ஒயின் வழங்குகிறார்கள். இதில் என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் எப்படி இந்த ஒயினை வழங்குகிறார்கள் என்பதுதான் இங்கு சுவாரஸ்யமான விஷயம்.

மீன் தூண்டில்

மீன் தூண்டில்

ஒருவர் தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் இருந்து மூடப்பட்ட கிளாசில் ஒயினை நிரப்பி அதை மீன் பிடிக்கும் தூண்டிலில் கட்டி அருகில் உள்ள வீட்டில் மொட்டை மாடியில் நிற்கும் நபருக்கு தூண்டில் மூலம் அளிப்பார். அவர் அந்த ஒயினை குடித்துவிட்டு, அதில் வேறு ஒரு ஒயினை ஊற்றி கொடுப்பார். இப்படியாக அங்கு இருக்கும் மக்கள் தங்கள் அண்டை வீடுகளில் ஒயினை பகிர்ந்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

வெனிசுலா கொண்டாட்டம்

வெனிசுலா கொண்டாட்டம்

உலகம் முழுக்க ஊரடங்கு காரணமாக மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வெனிசுலாவும் மிக மோசமான பொருளாதார சரிவை சந்தித்து உள்ளது. ஆனால் இதற்கு மத்தியிலும் அவர்கள் இப்படி ஒயின் பகிர்ந்து கொள்வது வழக்கமாகி உள்ளது. வெனிசுலாவின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த அழகான பழக்கம் பரவ தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க இந்த ஒயின் பகிர்தல் வைரலாக தொடங்கி உள்ளது.

Recommended Video

    Fake TASMAC Webstie| டாஸ்மாக் பெயரில் போலி வெப்சைட்... குடிமகன்களை ஏமாற்றிய கும்பல்
    புரட்சி வெடிக்கும்

    புரட்சி வெடிக்கும்

    வெனிசுலாவில் தற்போது ஆட்சிக்கு எதிராக புரட்சி வெடிக்கும் நிலை இருக்கிறது. அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுராவிற்கு எப்போது வேண்டுமானாலும் புரட்சி வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அங்கு அமெரிக்க படைகள் ஆட்சியை கலைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இந்த நிலையில் அங்கு இன்னொரு பக்கம் சந்தோசமாக ஒயின் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

    English summary
    People sharing Wine in the terrace during the lockdown in Venezuela country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X