For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரு நாட்டில் பெரும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.2 என பதிவு

Google Oneindia Tamil News

லிமா: பெரு நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 7.2 என்ற அளவில் மிகப் பெரிய நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சுமார் 257 கிலோ மீட்டர்கள் விரிவடைந்து இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கிறது. அசன்காரோ என்ற நகரத்திலிருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் தாக்கம் மிக அதிகமாக உணரப்பட்டுள்ளது. இது பொலிவியா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள பகுதி.

Peru: 7.2 magnitude earthquake strikes near Juliaca

கடந்த வாரம் அண்டைநாடான ஈக்வெடாரில், 7.5 என்ற அளவு ரிக்டர் அளவுகோலில் மிகக் கடுமையான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதன் தாக்கம் வடக்கு பெரு நாட்டில் உள்ள கடலோரம் மற்றும் அமேசான் மண்டலங்களை வெகுவாகத் தாக்கியது.

சுமார் 9 பொதுமக்கள் இதில் காயமடைந்திருந்தனர். அதேநேரம் இன்றைய நிலநடுக்கத்தில் சேத விவரம் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை.

English summary
An earthquake measuring 7.2 has struck Peru, acording to the United States Geological Survey. The USGS said it hit in the early hours of Friday around 40 miles north of the southern city of Juliaca at a depth of 150 miles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X