For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு கடும் மாரடைப்பு

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

70 வயதான முஷாரப் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளாராம். அவர் சுய நினைவுடன் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக கோர்ட்டுக்குப் போய்க் கொண்டிருந்தபோது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாம். இதையடுத்து கோர்ட்டுக்குப் போகாமல் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போயுள்ளனர்.

Pervez Musharraf suffers severe heart attack: report

இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவரை 2 முறை2 நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தும் அவர் பாதுகாப்பு காரணத்தைக் கூறி வராமல் தவிர்த்து வந்தார். ஆனால் இன்று கண்டி்பாக அவர் வந்தாக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனால் இன்று அவர் கோர்ட்டுக்குக் கிளம்பி வந்தபோதுதான் மாரடைப்பு ஏற்பட்டு விட்டதாம்.

முஷாரப்பை பாதுகாப்புப் படையினருக்கான இருதவியல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது நிலை மோசமாக இருப்பதாக அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

English summary
Pakistan's former military ruler Pervez Musharraf has suffered a severe heart attack, reports Press Trust of India.
 The 70-year-old is conscious but admitted to Critical Care Unit, PTI quoting APML spokesperson says. Musharraf was on his way to court for a hearing in his treason case today when he suffered the heart attack and was rushed to hospital. He had been summoned to the special tribunal in Islamabad after failing to show up for two previous sessions due to security threats against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X