For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெஷாவர் பள்ளி மீண்டும் திறப்பு: கனத்த இதயத்துடன், கண்ணில் நீருடன் வந்த மாணவர்கள்

By Siva
Google Oneindia Tamil News

பெஷாவர்: பெஷாவரில் தாலிபான்கள் தாக்குதல் நடத்திய ராணுவ பள்ளி ஒரு மாதம் கழித்து இன்று திறக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் கடந்த மாதம் 16ம் தேதி புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 140 குழந்தைகள் உள்பட 150 பேர் பலியாகினர். இதையடுத்து அந்த பள்ளி உள்பட பெஷாவர் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.

Peshawar schools reopen: 'How I will sit in empty class with empty benches'

சுமார் ஒரு மாதம் கழித்து ராணுவ பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் ஒருவித பயத்துடன் தான் வந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து தாக்குதல் நடந்த பள்ளி மாணவர் ஷாருக்கான்(16) கூறுகையில்,

என்னுடைய நண்பர்கள் 30 பேர் பலியாகிவிட்டனர். காலியாக உள்ள வகுப்பறையில் நான் எப்படி அமர்வேன். காலியாக உள்ள பெஞ்சுகளை எப்படி பார்ப்பேன். என் இதயம் நொறுங்கியுள்ளது. என் நண்பர்கள் இறந்துவிட்டனர். எனக்கு பள்ளிக்கு செல்லவே பிடிக்கவில்லை என்றார்.

தீவிரவாதிகள் ஷாருக்கின் இரண்டு கால்களிலும் சுட்டனர். அவர் இறந்தது போன்று நடித்து உயிர் பிழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Peshawar army public school got reopened today after a month. The school in which army kids are studying was attacked by Talibans on december 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X