For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெற்றிகரமாக வால்நட்சத்திரத்தினை அடைந்த “ரொசெட்டா” – ஆய்வுப்பணிகளில் மும்முரம்!

Google Oneindia Tamil News

பெர்லின்: ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் சார்பில் புதன்கிழமையன்று வெற்றிகரமாக வால் நட்சத்திரத்தினை சென்றடைந்த ரொசெட்டா விண்வெளி ஓடமானது தன்னுடைய பணியைத் துவங்கி விட்டது.

ரொசெட்டா என்பது ஐரோப்பிய விண்வெளி மையத்தால், வால் நட்சத்திரம் ஒன்றை ஆய்வதற்காக தொடங்கப்பட்ட 12 ஆண்டுகாலத் திட்டமாகும்.

ரொசெட்டா விண்கலம் 2004 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஆரியாயன் ஏவுகணை மூலம் ஏவப்பட்டது. ரொசெட்டா விண்கலத்தில், ஃபைலி என்ற தரையுலவி இணைக்கப்பட்டிருந்தது.

வால் நட்சத்திர ஆய்வுப் பணி:

வால் நட்சத்திர ஆய்வுப் பணி:

ரொசெட்டா ஆய்வுக் கலம் விண்வெளியில் நீண்ட காலம் சுற்றி வந்து 67பி/ சி-ஜி 67பி/சுரியுமொவ்-கெராசிமென்கோ என்ற வால்நட்சத்திரத்தை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

10 ஆண்டுகள் பயணம்:

10 ஆண்டுகள் பயணம்:

இவ்விண்கலம் 10 ஆண்டு பயணத்துக்குப் பின், 67பி/ சி-ஜி வால் நட்சத்திர சுற்றுப்பாதையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந் தது.

ரொசெட்டாவில் இருந்து பிரிவு:

ரொசெட்டாவில் இருந்து பிரிவு:

தற்போது, வால்நட்சத்திரத் தின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ளா ஃபைலி ஆய்வுக் கலம், தாய் ஆய்வுக்கலமான ரொசாட்டோ கலத்திலிருந்து தனியே பிரிந்துள்ளது.

இரண்டு முக்கிய பணிகள்:

இரண்டு முக்கிய பணிகள்:

நேற்று முதல் அது தன்னுடைய இரண்டு பணிகளைத் துவங்கி உள்ளது. ஒன்று வால் நட்சத்திரத்தின் மேற்பகுதியில் துளையிடுதல், மற்றொன்று தன்னைத் தானே சுழற்றிக் கொண்டு இயங்கத் தேவையான சூரிய வெளிச்சத்தைப் பெருதல்.

அபாயகரமான வேலைகள்:

அபாயகரமான வேலைகள்:

இரண்டு பணிகளுமே அபாயகரமான வேலைகள்தான். ஏனெனில், வெட்டி எடுக்கப்படும் வால் நட்சத்திரமானது ஒருவேளை விண்வெளி மண்டலத்தில் விழுந்துவிட்டால் மொத்த உழைப்பும் வீணாகிவிடும்.

முதல்முறை சாதனை:

முதல்முறை சாதனை:

ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு பார்த்தால், இவ்விண்கலமானது மிகப்பெரிய விண்வெளி வரலாற்றுச் சாதனையைப் புரிந்துள்ளது. ஒரு வால் நட்சத்திரம் ஒன்றை, விண்வெளி ஓடம் ஒன்று நெருங்குவதென்பது இதுவே முதல்முறையாகும்.

சுழற்சி வெற்றி என்ற செய்தி:

சுழற்சி வெற்றி என்ற செய்தி:

"என்னுடைய சுழற்சி வெற்றிபெற்றது. (35 டிகிரி). இங்கிருந்து முழு வால் நட்சத்திரமும் தெரிகின்றது" என்ற செய்தியானது ரொசெட்டா விண்வெளி ஓடத்தின் "டுவிட்டர்" பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மெய்யான கனவு:

மெய்யான கனவு:

அதற்கு முன்னர், விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், "முதல் முதலாக வால் நட்சத்திரத்தில் துளையிடும் விண்வெளி ஓடம் - உண்மையான கனவு" என்று தெரிவித்துள்ளனர்.

தொடர் சோதனைகள்:

தொடர் சோதனைகள்:

67பி/சுரியுமொவ்-கெராசிமென்கோ என்ற அந்த வால் நட்சத்திரத்தில் கிட்டதட்ட 311 மில்லியன் மைல்கள் தொலைவில் அதாவது 500 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் விண்வெளி ஓடத்தின் லேண்டரானது தொடர் சோதனைகளை நடத்த உள்ளது. அது தொடர்பான செய்திகள், புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்ப உள்ளது.

முதன்மை பேட்டரி காலி:

முதன்மை பேட்டரி காலி:

ஆனால், ரொசெட்டாவின் முதன்மை பேட்டரியில் சிறிதளவே சக்தி மீதமிருப்பதால், சூரிய ஒளியின் மூலமாக சக்தியினை உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் திருப்பப்பட்டுள்ளது.

கேள்விக்குறியான எரிசக்தி:

கேள்விக்குறியான எரிசக்தி:

வால் நட்சத்திரத்தில் 25 சென்டிமீட்டர்கள் வரை உள்ளிறக்கப்பட்டுள்ள ஆய்க்குழாயானது அதன் மாதிரிகளை சேகரிக்கத் துவங்கி விட்டது. ஆனால், அந்த அளவிற்கான எரிசக்தி விண்கலத்தில் இருக்கின்றதா என்பதுதான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

நடப்பவை நல்லவையே:

நடப்பவை நல்லவையே:

"எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது. தேவையில்லாத பயங்கள் தேவையில்லை" என்று இம்மையத்தின் இயக்குநர் ஆண்ட்ரியா அகாமோசா.

விண்வெளி வரலாற்றில் சாதனை:

விண்வெளி வரலாற்றில் சாதனை:

மொத்தத்தில் விண்வெளியின் வரலாற்றில் வால் நட்சத்திரம் ஒன்றின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த மனிதனால் செய்யப்பட்ட முதல் பொருள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The spacecraft that landed on a comet performed two tricky maneuvers Friday, by drilling into the rocky surface and rotating itself to catch more sunlight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X