For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யா... ஸ்புட்னிக் வி... மனித பரிசோதனைக்கு தயாரானது பிலிப்பைன்ஸ்!!

Google Oneindia Tamil News

மணிலா: ரஷ்யா கண்டுபிடித்து இருக்கும் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து பிலிப்பைன்சில் மூன்றாம் கட்ட மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருப்பதாக அந்த நாட்டின் அதிபருக்கான செய்தி தொடர்பாளர் ஹேரி ரோக் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    Russia Corona Vaccine| Why India may have to wait longer? | Sputnik V Vaccine | Oneindia Tamil

    இதுகுறித்து மேலும் அவர் குறிப்பிட்டு இருக்கும் செய்தியில், ''பிலிப்பைன்சில் நடத்தப்படும் மனித பரிசோதனைக்கான செலவை ரஷ்யா ஏற்றுக் கொள்ளும். பிலிப்பைன்ஸ் மக்களிடம் இந்த மருந்து எந்தளவிற்கு பாதுகாப்பானதாக இருக்கும், நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என்று பார்க்க வேண்டும். ஆயிரக்கணக்கானவர்கள் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    Philippines is getting ready for Sputnik V Corona vaccine human trial

    ரஷ்யா மற்றும் பிலிப்பைன்சில் மூன்றாம் மட்ட பரிசோதனை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும். வரும் ஏப்ரல் 2021ல் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் ரஷ்ய தயாரிப்பு மருந்தை பரிசோதனைக்குப் பின்னர் அனுமதிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

     ஆகஸ்ட் 15 வந்தாச்சு.. கொரோனா தடுப்பூசி எங்கே? ஆகஸ்ட் 15 வந்தாச்சு.. கொரோனா தடுப்பூசி எங்கே?

    ரஷ்யாவில் இருக்கும் கமாலியா ஆராய்ச்சி நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை கடந்த செவ்வாய் கிழமை அந்த நாட்டின் அரசாங்கம் பதிவு செய்து இருந்தது. ரஷ்யாவின் தடுப்பு மருந்தை தங்களது நாட்டில் முதன் முறையாக சோதித்துப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாடு விருப்பம் தெரிவித்துள்ளது.

    English summary
    Philippines is getting ready for Sputnik V Corona vaccine human trial
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X