For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிலிப்பைன்ஸில் ஆக்ரோஷமாக உறுமும் மாயோன் எரிமலை.. ஒருசில நாட்களில் வெடித்து சிதறும் என எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸில் லாவாக்களை கக்கி வரும் மாயோன் எரிமலை ஒரு சில நாட்களில் வெடித்து சிதறும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிலிப்பைன்ஸில் ஆக்ரோஷமாக உறுமும் மாயோன் எரிமலை- வீடியோ

    லீகாஸ்பி: பிலிப்பைன்ஸில் லாவாக்களை கக்கி வரும் மாயோன் எரிமலை இன்னும் ஒரு சில நாட்களில் வெடித்து சிதறும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    பிலிப்பைன்ஸின் அல்பே மாகாணத்தில் உள்ளது மாயோன் எரிமலை. இந்த எரிமலை கடந்த 2 வாரங்களாக சாம்பலையும் கரும் புகை மூட்டத்தையும் கக்கி வருகிறது.

    இதனால் எரிமலையை சுற்றி 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 84 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    லாவாக்களை கக்கும் எரிமலை

    லாவாக்களை கக்கும் எரிமலை

    கடந்த திங்கள் கிழமை பிற்பகலில் இந்த மாயோன் எரிமலை திடீரென வெடித்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீர் திடீர் என வெடித்து லாவாக்களை கக்கியது இந்த மாயோன் எரிமலை.

    இரு நகரங்களை மூடிய சாம்பல்

    இரு நகரங்களை மூடிய சாம்பல்

    இதனால் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு சாம்பல் படிந்தது. எரிமலை வெடிப்பால் கேமலிக் மற்றும் கைனோபட்டன் ஆகிய நகரங்களை சாம்பல் பெருமளவு மூடியது.

    அரசின் புதிய திட்டம்

    அரசின் புதிய திட்டம்

    இதைத்தொடர்ந்து மாயோன் எரிமலையை சுற்றியுள்ள நிலப்பரப்பில் மனிதர்கள் வசிக்கக்கூடாது என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

    ஒரு சில நாட்களின் வெடிக்கும்

    ஒரு சில நாட்களின் வெடிக்கும்

    இந்நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் எரிமலை வெடித்து சிதறும் என்று அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    2200 பேர் உயிரிழந்தனர்

    2200 பேர் உயிரிழந்தனர்

    இதன்காரணமாக 7 கிலோமீட்டர் சுற்றளவு அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எரிமலை சீற்றம் அதிகரிப்பால் பிலிப்பைன்ஸ் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 1814-ம் ஆண்டு மாயோன் எரிமலை வெடித்து சிதறியதில் 2200 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Philippines Mayon volcano will erupt in couple of days. Mount Mayon in northeastern Albay province has been erupting more than two weeks, and 84,000 people who fled are staying in schools and other crowded shelters.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X