For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்தடுத்து டிரஸ்.. நடு ஏர்போர்ட்டில்.. மிரண்டு விழித்த பயணிகள்.. அதிர வைத்த இளம் பெண்!

பிலிப்பைன்ஸ் ஏர்போர்ட்டில் இளம் பெண் செய்த காரியம் சிரிப்பை வரவழைத்துள்ளது

Google Oneindia Tamil News

பிலிப்பைன்ஸ்: ஏர்போர்ட்டில்.. திடீரென ஒரு இளம் பெண் டிரஸ்களை எடுத்து அணிந்து கொண்டே இருந்ததை பார்க்கவும் யாருக்கும் சட்டென எதுவும் புரியவில்லைதான்!
பொதுவாக ஃபிளைட்டில் யார் பயணம் செய்தாலும் அவர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது இந்த லக்கேஜ்கள்தான். எடை போட்டுதான் எதனையும் கொண்டு போக முடியும் என்பதுதான் விதி.

philippines womans clothing issue in airport

நாம் பஸ், ரயிலில் என்றால், எவ்வளவு எடையோ, அதுக்கேத்த கட்டணம் வசூலிப்பார்கள். அதுவும் அந்த எடை நிர்ணயிக்கப்பட்டுதான் இருக்கும். விமானத்தில், நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகமாக உடைமைகள் இருந்தால், அதுக்கு அதிக பணம் கட்ட வேண்டும். இதுதான் அங்கு விதி.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோட்ரிக்ஸ் என்ற ஒரு இளம் பெண் கடந்த 1-ம் தேதி ஃபிளைட் ஏற சென்றார். கையில் ஏகப்பட்ட லக்கேஜ்களை வைத்திருந்தார். எப்படியும் அதை வெயிட் போட்டால் நிறைய பணம் வசூலிப்பார்கள் என்று தெரியும்.

எனினும் பெட்டி, படுக்கை என லக்கேஜ்ஜுடன் அந்த பெண் உள்ளே போகவும், ஊழியர்கள் வழக்கமாக வந்து வெயிட் பார்த்து செக் செய்தார்கள். குறிப்பிட்ட எடையைவிட அதிகமாக லக்கேஜ் இருந்தது. வழக்கமாக ஏழு கிலோதான் அனுமதி. இந்த பெண்ணின் லக்கேஜ் இரண்டரை கிலோ ஜாஸ்தியாக அதாவது 9.6 கிலோ இருந்தது.

அதனால், ஊழியர்கள் எக்ஸ்ட்ரா கட்டணம் கேட்டனர். உடனே அந்த பெண் வித்தியாசமான ஒரு ஐடியா செய்தார். கடகடவென சூட்கேஸை திறந்தார்.. அதில் இருந்த சில துணிகளை எடுத்து கிடுகிடுவென மாட்டி கொண்டார். அதாவது அவர் மாட்டி கொண்ட டிரஸ்கள் மட்டும் எப்படியோ 2 கிலோவுக்கு மேல் இருந்தது.

டீஷர்ட், ஷார்ட்ஸ், பனியன், சட்டைகள் என கன்னாபின்னாவென்று மாட்டிக் கொண்டு நின்றார். இதை பார்த்ததும், அங்கிருந்த ஏர்போர்ட் ஊழியர்களுக்கே சிரிப்பு வந்துவிட்டது. அதுவும் ஏழு கிலோ அளவு லக்கேஜ் தந்து, இப்போ வெயிட் போடுங்க என்றார். உடனே இதனை பார்த்த பயணிகள் சிலர், போட்டோ எடுத்து இணையத்தில் போட்டு வைரலாக்கி விட்டனர். அதை பார்த்த பலரும் விழுந்து விழுந்து சிரித்து வருவதுடன், ஷேர் செய்தும் வருகின்றனர்.

English summary
philippine girls new idea of clothes to avoid baggage fine picture goes viral on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X