For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீக்கப்பட்ட புகைப்படங்கள்.. அகற்றப்பட்ட சிலை.. மாயமான கிம் ஜோங் உன்.. வடகொரியாவில் மீண்டும் பதற்றம்

வடகொரியாவின் முன்னாள் அதிபர்கள் புகைப்படங்கள், சிலைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருவதும், அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் மாயமாகி உள்ளதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

பியாங்யாங்: வடகொரியாவின் முன்னாள் அதிபர்கள் புகைப்படங்கள், சிலைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருவதும், அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் மாயமாகி உள்ளதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    மாயமான கிம் ஜோங் உன்... வடகொரியாவில் மீண்டும் பதற்றம்

    வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் காணாமல் போனதாக வெளியாகும் செய்திகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் காணாமல் போய் மீண்டும் திரும்பி வந்தவர், தற்போது மீண்டும் காணாமல் போய் உள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் கிம் ஜோங் உன் காணாமல் போனார். அவர் இறந்துவிட்டதாக, மூளை சாவு அடைந்துவிட்டதாக செய்திகள் பரவிய வண்ணமிருந்தது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல்... படிப்படியாக அரசு நிகழ்ச்சிகள்திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல்... படிப்படியாக அரசு நிகழ்ச்சிகள்

    மீண்டு வந்தார்

    மீண்டு வந்தார்

    இந்த நிலையில் வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் வெளியே வந்தார். 21 நாட்களுக்கு பின் அவர் மீண்டும் வெளியே வந்தார். இந்த நிலையில் கிம் ஜோங் உன் மீண்டும் காணாமல் போய் இருக்கிறார். மே 1ம் தேதி வந்த கிம் ஜோங் உன் வெளியே எங்கும் காணப்படவில்லை. மூன்று வாரமாக அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை.

    மறுபடியும் காணவில்லை

    மறுபடியும் காணவில்லை

    அதோடு கடந்த முறை வெளியே வந்தது உண்மையில் கிம் ஜோங் உன்தான் என்று கேள்வி எழுந்துள்ளது. உண்மையில் அது கிம்தானா அல்லது அவரைப்போலவே இருக்கும் பாடி டபுளா என்றும் கேள்வி எழுந்து இருக்கிறது. அப்போது வெளியே வந்த நபருக்கும் கிம் ஜோங்கிற்கு நிறைய வித்தியாசம் இருப்பதாக இணையத்தில் ஆதாரங்கள் வெளியானது. நிறைய புகைப்படங்கள் இது தொடர்பாக வெளியானது.

    புகைப்படங்கள் நீக்கம்

    புகைப்படங்கள் நீக்கம்

    இந்த நிலையில் அடுத்த திருப்பமாக வடகொரியாவின் முன்னாள் அதிபர்கள் புகைப்படங்கள், சிலைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருவதும் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கிம் இல் சங் நினைவு சதுக்கத்தில் இருந்து கிம் ஜோங் உன்னின் தாத்தா கிம் இல் சங் மற்றும் அப்பா கிம் ஜோங் இல் ஆகியோரின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. அங்கு இருந்த கிம் இல் சங்கின் சிலையும் நீக்கப்பட்டுள்ளது. திடீர் என்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏன் பதற்றம்

    ஏன் பதற்றம்

    எந்த அறிவிப்பும் இன்றி சத்தமில்லாமல் நடக்கும் இந்த செயல் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கிம் ஜோங் உன்னின் புகைப்படத்தை வைக்க போவதாகவும் பேச்சுக்கள் எழுந்து வருகிறது. அதேபோல் அந்த சதுக்கத்தில் நுழைவாயில் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. அங்கு ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. ஏன் இப்படி தொடர்ச்சியாக நடக்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது. கிம் இல் சங் சதுக்கம் அங்கு மிக முக்கியமான அரசியல் பகுதியாகும்.

    பணியில் இருந்து நீக்கம்

    பணியில் இருந்து நீக்கம்

    அங்கு இப்படி நடக்கும் மாற்றங்கள், அரசியலில் எதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுவதாக கூறுகிறார்கள். வடகொரியாவின் அரசியல் தலைவர்களுக்கு மரணத்திற்கு பின்தான் சிலைகள், புகைப்படங்கள் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அங்கு கிம் ஜோங் புகைப்படத்தை வைக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக வெளியாகும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு சில நாட்களுக்கு முன் உயர் அதிகாரிகள் சிலர் பணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Photos of former Presidents removed in Pyongyang after Kim Jong Un disappears again in North Korea.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X