For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை விமானி மீறியதே கராச்சி விபத்திற்கு காரணம் என தகவல்

Google Oneindia Tamil News

கராச்சி: பாகிஸ்தானில் கராச்சி விமான விபத்திற்கு விமானியின் அலட்சியம்தான் காரணம் என சொல்லப்படுகிறது. விமானத்தின் உயரம் மற்றும் வேகம் குறித்து விமான கட்டுப்பாட்டு மையத்திலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அதை விமானி மீறி தரையிறக்க முயன்றதே விபத்திற்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    Pakistan flight incident video | விமானி பேசிய ஆடியோ... விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி

    பாகிஸ்தானில் லாகூரில் இருந்து நேற்று முன் தினம் கராச்சி நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முயன்ற போது அருகில் உள்ள குடியிருப்புகளில் மோதி விமானம் நொறுங்கியது.

    இந்த விபத்தில் 97 பேர் பலியாகிவிட்டனர். இருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    "பலமுறை கூப்பிட்டும் மனைவி வரவில்லை.. நான் கோழையும் இல்லை" லட்டர் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இந்த நிலையில் விமான கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை விமானி மீறியதே விபத்திற்கு காரணம் என தகவல்கள் கூறுகின்றன. அதாவது தரையிறங்குவதற்கு விமான கட்டுப்பாட்டு மையத்தை விமானி தொடர்பு கொண்டார். அப்போது விமான கட்டுப்பாட்டு மையங்கள் அவருக்கு விமானத்தின் வேகம் மற்றும் உயரம் குறித்து இரு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

    கராச்சி விமான நிலையம்

    கராச்சி விமான நிலையம்

    அதாவது விமானத்தின் உயரத்தை குறைக்குமாறும், வேகத்தை குறைக்குமாறு விமான கட்டுப்பாட்டு மையம் எச்சரித்தது. ஆனால் இதை விமானி அலட்சியப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமான கட்டுப்பாட்டு மையம் (ஏடிசி) கூறுகையில், லாகூர் விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி மதியம் 1.05 மணிக்கு விமானம் புறப்பட்டது. அந்த விமானம் கராச்சி விமான நிலையத்திற்கு 2.30 மணிக்கு தரையிறங்கியிருக்க வேண்டும்.

    15 நாட்டிகல் மைல்

    15 நாட்டிகல் மைல்

    கராச்சியிலிருந்து 15 நாட்டிகல் மைல் தூரத்தில் இருந்த விமானம் தரையிறங்குவதற்கு 7000 அடி உயரத்தில் இருப்பதற்கு பதிலாக 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்தது. அப்போதே விமானத்தின் உயரத்தை குறைக்க வேண்டும் என முதல் எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் அவரோ விமானத்தின் உயரத்தை குறைக்காமல் ஒரு பிரச்சினையும் இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். கராச்சி விமான நிலையத்திற்கு 10 நாட்டிக்கல் மைல் தூரம் இருந்த போது 3000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 7000 அடி உயரத்தில் பறக்கவிட்டார்.

    97 பேர் பலியாக காரணம்

    97 பேர் பலியாக காரணம்

    அப்போதும் உயரத்தை குறைக்குமாறு விமானிக்கு 2ஆவது முறையாக எச்சரிக்கையுடன் கூடிய கட்டளையிட்டோம். ஆனால் அதற்கும் அந்த விமானி, தன்னால் இந்த நிலையை கையாள முடியும் என்றும் தரையிறங்க தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே விமான கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை விமானி மீறியதே 97 பேர் பலியாக காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Pilot ignore warning of Height and speed of the plane from Air TRaffic Control leads to crash says Reports.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X