For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுழன்றடித்த பனிப்புயல்.. சுடச் சுட பீட்ஸா.. பைலட்டின் பலே ஐடியா.. கனடாவில் கலகல!

விமான பயணிகளுக்காக பைலட் பீட்சா ஆர்டர் செய்து தந்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

Google Oneindia Tamil News

கனடா: "நாங்களும் எங்கெங்கியோ பீட்சா டெலிவரி செய்திருக்கிறோம்.. ஆனா இப்படி ஒரு பீட்சா டெலிவரியை பார்த்ததே இல்லை" என்கிறார்கள் கனடா நாட்டின் அந்த ஹோட்டல்காரர்கள்!

ஏர் கனடா 608 என்ற ஃபிளைட் ஒன்று டொரன்டோ நகரிலிருந்து நோவா ஸ்காட்டியாவுக்கு கிளம்பியது. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த ஃபிளைட்டில் இருந்தனர்.

ஆனால் நோவா ஸ்காட்டியாவில் கிளைமேட் ரொம்பவும் மோமாகிவிட்டது. பைலட்டால் ஓட்டவும் முடியவில்லை.

நாகை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை... மக்கள் மகிழ்ச்சிநாகை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை... மக்கள் மகிழ்ச்சி

களைத்து விட்டனர்

களைத்து விட்டனர்

அதனால் எல்லோருமே ஃபிளைட்டுக்கு உள்ளேயே உட்கார்ந்து விட்டனர். இப்படியே பல மணி நேரம் உட்கார வேண்டியதாகி விட்டது. அதனால் நேரம் ஆக ஆக எல்லோரும் டயர்ட் ஆக ஆரம்பித்துவிட்டனர். அதனால் பயணிகளை குஷிப்படுத்த அந்த பைலட் ஒரு ஐடியா செய்தார். அவர்களுக்காக சுடச்சுட பீட்சாவை செல்போனில் ஆர்டர் செய்தார். ஏர்போர்ட்டுக்கு பக்கத்திலேயே அந்த பீட்சா ஷாப் இருந்தது. அதன் பெயர் மிங்க்லர்ரஸ்.

களைத்து விட்டனர்

களைத்து விட்டனர்

அதனால் எல்லோருமே ஃபிளைட்டுக்கு உள்ளேயே உட்கார்ந்து விட்டனர். இப்படியே பல மணி நேரம் உட்கார வேண்டியதாகி விட்டது. அதனால் நேரம் ஆக ஆக எல்லோரும் டயர்ட் ஆக ஆரம்பித்துவிட்டனர். அதனால் பயணிகளை குஷிப்படுத்த அந்த பைலட் ஒரு ஐடியா செய்தார். அவர்களுக்காக சுடச்சுட பீட்சாவை செல்போனில் ஆர்டர் செய்தார். ஏர்போர்ட்டுக்கு பக்கத்திலேயே அந்த பீட்சா ஷாப் இருந்தது. அதன் பெயர் மிங்க்லர்ரஸ்.

சீஸ் பீட்சா

சீஸ் பீட்சா

அந்த கடைக்கு போன் செய்த பைலட், "நிறைய சீஸ் போடணும், பேப்பரோனி சேர்த்து 23 பீட்சா சுட சுட வேணும்" என்றார். இப்படி ஒரு ஆர்டர் அதுவும் பிளைட்டுக்குள் இருப்பவர்களுக்கென்று இதுவரை அந்த கடைக்கு வந்ததே இல்லையாம். இருந்தாலும் நிலைமையை புரிந்து கொண்ட கடைக்காரர், "ஒன்றரை மணி நேரம் ஆகுமே, பரவாயில்லையா" என்று கேட்க, பைலட்டும் அதற்கு ஓகே சொல்ல.. பீட்சா வேகவேமாக தயாரானது.

துள்ளி குதித்தனர்

துள்ளி குதித்தனர்

பைலட் பீட்சா ஆர்டர் செய்த விஷம் ஃபிளைட்டில் இருந்த பயணிகளுக்கு தெரியாது. ஒன்றரை மணி நேரத்தில் சுடச்சுட, மணக்க மணக்க சீஸ் பீட்சா டெலிவர் செய்யப்பட்டதும், அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சேரில் இறுக்கமான முகத்துடன், வெறுப்பில் உட்கார்ந்திருந்தவர்கள் பீட்சாவை பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். ஆசை தீர சாப்பிட்டனர்!

பைலட்

பைலட்

இது சம்பந்தமாக அதே ஃபிளைட்டில் பயணம் செய்த ஃபிலோமினா என்ற பெண் சிபிசி செய்தி நிறுவனத்துக்கு இந்த விஷயத்தை சொல்லி பூரித்து போனார். அப்போது பீட்சா ஆர்டர் செய்த பைலட்டை ரொம்பவே புகழ்ந்து தள்ளிவிட்டார் அந்த பெண்!

English summary
Canada Pilot orders Pizzas for stranded passengers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X