For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயமான விமான கருப்புப் பெட்டியை 6 நாட்களுக்குள் கண்டுபிடித்தே ஆக வேண்டும்

By Siva
Google Oneindia Tamil News

பெர்த்: தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் இன்றுடன் முடிவதால் அதில் இருந்து வரும் ஒலியின் அளவு இன்று முதல் குறையும்.

239 பேருடன் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் அது விபத்துக்குள்ளான ஒரு மாதம் தான் தாக்குப்பிடிக்கும். இந்நிலையில் கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் இன்றுடன் முடிகிறது.

Pingers of MH 370 fades from today

இதையடுத்து கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியின் அளவு இன்று முதல் குறையத் துவங்கி வரும் 12ம் தேதி முழுவதுமாக நின்றுவிடும். அதற்குள் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தாக வேண்டும்.

முன்னதாக கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை சீன கப்பலும், ஆஸ்திரேலிய கப்பலும் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கண்டறிந்தன. இதையடுத்து அந்த ஒலிகள் வந்த இரண்டு இடங்களிலும் தேடல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As the batteries of the black box of missing plane dies on monday, the ping from it begins to fade from today and would go silent from april 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X