For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலில் மீண்டும் 2 முறை கருப்புப் பெட்டி சிக்னலை கண்டறிந்த ஆஸ்திரேலிய கப்பல்

By Siva
Google Oneindia Tamil News

பெர்த்: மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் ஒன்று கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை மீண்டும் கண்டறிந்துள்ளது.

தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய கடற்படை கப்பலான ஓஷன் ஷீல்டில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டுபிடிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தி கருவியை அமெரிக்க கடற்படை அளித்துள்ளது.

Pings heard again by Australian ship; Black Box of MH370 might be found?

இந்நிலையில் ஆஸ்திரேலிய கப்பல் விமானத்தை தேடுகையில் நேற்று மாலை மற்றும் இரவு ஆகிய 2 வேளைகளில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்துள்ளது. இதன் மூலம் விமானத்தை கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

ஒலி வந்த இடத்தில் இன்று 11 ராணுவ விமானங்கள், 4 பயணிகள் விமானங்கள் மற்றும் 14 கப்பல்கள் மலேசிய விமானத்தை தேடி வருகின்றன.

முன்னதாக சீன கப்பலும், ஆஸ்திரேலிய கப்பலும் கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Australian navy ship equipped with US-Navy supplied black box detector (Towed Pinger Locator) has detected two more pings last evening and night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X