For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகான ஆல்ப்ஸ் மலையில்.. பிங்க் நிறத்தைத் தெளித்தது யார்?... சூடான பூமியை கை காட்டும் விஞ்ஞானிகள்!

Google Oneindia Tamil News

ரோம்: இத்தாலியில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் உறைந்து காணப்படும் பனியானது இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இது பார்ப்பதற்கு தர்பூசணி பழம் போல் இருக்கிறது.

இத்தாலியில் பெல்லிசானோவின் அருகில் பிரசேனா பனிமலை உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 3,069 மீட்டருக்கு மேல் உள்ளது. இது ஆல்ப்ஸின் மிகப் பெரிய மலை பகுதி என வர்ணிக்கப்படுகிறது.

கோடை, வசந்த காலத்தில் ஆல்ப்ஸ் மலையில் தர்பூசணி பனி படர்ந்திருப்பது வழக்கமானதுதான். ஆனால் இந்த ஆண்டு அதன் வளர்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது.

கண்கொள்ளா காட்சி

கண்கொள்ளா காட்சி

இதனால் இந்த மலை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதற்கு காரணம் ஒரு வகையான பனி பாசி என கூறப்படுகிறது. கிளாமிடோமோனால் நிவாலிஸ் என்ற பனி பாசியே இந்த பனிமலை நிறம் மாறுவதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. குறைந்த பனிப்பொழிவு, அதிக வளிமண்டல வெப்பநிலை ஆகியவைகள் பாசிகள் வளர காரணமாக உள்ளது.

கோடை காலம்

கோடை காலம்

இதை இத்தாலியின் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலின் பியாஜியோ டீ மவுரோ கூறுகையில் கிரீன்லாந்தின் டார்க் ஜோன் எனப்படும் இடத்தில் செழித்து வளரும் ஒரு வகை உயிரினத்தால் இளஞ்சிவப்பு பனி ஏற்படக் கூடும். இது பனி உருகும் பகுதி. இதனால் பனிக்கட்டியின் மேற்கு விளிம்பில் பரவலாக இருள் ஏற்படுகிறது. இந்த பாசி ஆபத்தானது இல்லை. கோடை காலத்தில் இது ஏற்படுவது வாடிக்கைதான்.

துரிதம்

துரிதம்

சூரிய கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு துரிதப்படுத்துவதால் பனியை இருட்டடிக்கும் அனைத்தும் அது உருகுவதற்கு காரணமாகிறது. இந்த ஆல்கா அன்சிலோனெமா நோர்டென்ஸ்கியோல்டி என்ற பனிப்பாறை ஆல்கா என கருதினர். ஆனால் அது தவறு. இந்த வகை பாசிகளால் பனி ஊதா நிறமாகத்தான் மாறும். இவை கிரீன்லாந்து, ஆண்டிஸ், இமயமலைகளில் மட்டுமே காணப்படுகின்றன.

பனிபாசி

பனிபாசி

எனவே இந்த பிங்க் நிற பாசி, கிளாமிடோமோனாஸ் நிவாலிஸ் என பனி பாசியாகும் என்றார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆல்ப்ஸில் 3இல் 2 பங்கு பனி உருகியது. 2050-ஆம் ஆண்டு ஆல்ப்ஸ் மலையில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது 4000 பனிமலைகள் உருகும் அபாயம் உள்ளது. உலகம் முழுவதும் அளவுக்கு அதிகமான கார்பனை உமிழ்வதால் 2100 ஆம் ஆண்டு 3-இல் 2 பங்கு பனிமலைகள் உருகும் என தெரிவித்துள்ளது.

English summary
Pink snow in the Italian alps mountain looks like watermelon. It was due to the glacier algae.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X