For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது கொஞ்சம் கஷ்டம் தான்.. ஆனா, இப்டி சாப்பிட்டா பீட்சா ப்ரீ.. அமெரிக்க உணவகத்தின் வித்தியாசமான சவால்

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: அமெரிக்க உணவகம் ஒன்றில் செல்போன் பார்க்காமல், தன் அருகில் இருப்பவர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிடுபவர்களுக்கு பீட்சா இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கையில் விரல்களில் ஒன்றாக கருதப்பட்ட செல்போன், இப்போது கைகளாக மாறி விட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்தளவிற்கு எப்போதும் கையில் செல்போனுடன் தான் மக்கள் வலம் வருகின்றனர். ஒருசிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை வைத்துள்ளனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனுக்கு அடிமையாகவே உள்ளனர். கண்களால் காண்பதைக் கூட, செல்போன் வாயிலாக பார்ப்பதற்கே மக்கள் விரும்புகின்றனர். அருகில் இருப்பவர்களிடம் முகம் கொடுத்துப் பேசாமல், முகநூல் வாயிலாக செல்போனில் சிரித்துப் பேசுகின்றனர்.

அமெரிக்க உணவகம்:

அமெரிக்க உணவகம்:

ஆனால், இந்த மாற்றங்கள் நல்லதல்ல. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் செல்போனால் மக்களுக்கு கெடுதியே அதிகம். எனவே சாப்பிடும் போதாவது மற்றவர்களுடன் மனம் விட்டு சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அமெரிக்க உணவகம் ஒன்று வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலவச பீட்சா:

இலவச பீட்சா:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரெஷ்னோ நகரில் உள்ளது கரி பீட்சா உணவகம். இங்கு உணவருந்த வருபவர்கள் செல்போனை பயன்படுத்தாமல் அருகில் இருப்பவர்களுடன் பேசிக் கொண்டு சாப்பிட்டால் பீட்சா இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

நான்கு பேர்:

நான்கு பேர்:

குழுவாக சாப்பிட வந்தால் அந்தக் குழுவில் இருப்பவர்களுள் குறைந்தபட்சமாக நான்கு பேர் செல்போன் பயன்படுத்தாமல் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் அந்த ஒட்டுமொத்த குழுவுக்குமே இலவசமாக பீட்சா வழங்கப்படும்.

 பாதுகாப்பு பெட்டகம்:

பாதுகாப்பு பெட்டகம்:

இந்த சவாலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், உணவகத்திற்கு வந்ததும் தனது செல்போனை உணவகப் பணியாளர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்களது செல்போன் பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்படும். சாப்பிட்டு முடித்து விட்டு கிளம்பும் போது திரும்பவும் தங்களது செல்போன்களை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

காரணம் இது தான்:

காரணம் இது தான்:

மக்கள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிட வேண்டும் என்ற நோக்கத்துடனே இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக அந்த பீட்சா நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களிடையேயும் இந்த போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Curry Pizza Company in Fresno wants people to stop texting, swiping and scrolling. They want patrons to talk to each other. If you get through the meal without your phone, you get a free pizza.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X