For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

362 கிலோமீட்டர் மெனக்கெட்டு பயணம்.. காரணத்தை கேட்டால் ஆடிப் போய் விடுவீர்கள்!

362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை 18 வயது இளைஞர் டெலிவரி செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

மிச்சிகன்: மனிதாபிமானம் கடல்தாண்டியும் எல்லைகளை கடந்தும் பரந்து விரிந்து கிடக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்!

ஜூலீ மார்கன் - ரிச் மார்கன்!! இவர்கள் ஒரு அமெரிக்க தம்பதி. மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு வேறு ஒரு தொலை தூர நகரத்தில் வேலை கிடைத்ததும், 20 வருஷத்துக்கு முன்னாடியே மிச்சிகனிலிருந்து கிளம்பி வந்துவிட்டார்கள்.

பீட்சா கடை

பீட்சா கடை

என்றாலும் மிச்சிகன் போன்ற ஒரு சிறந்த இடத்தை இவர்களால் வாழ்க்கையில் மறக்கவே முடியவில்லை. அதுவும் அங்கிருக்கும் பீட்சா கடை என்றால் இருவருக்குமே கொள்ளை பிரியம். இந்நிலையில், ஜூலிக்கு பிறந்த நாள் வரப்போகிறது. அதனால் தம்பதி இருவரும் பிறந்த நாளன்று மிச்சிகனில் உள்ள பீட்சா கடைக்கு போகலாம் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.

[மணப்பெண் தோழி யாருப்பா இன்னிக்கு.. குஷியில் குதிக்கும் விருந்தினர்கள்.. சீனாவில் விபரீத கல்யாணங்கள்!]

புற்றுநோய் தாக்கியது

புற்றுநோய் தாக்கியது

ஆனால் பரிதாபம்.. ரிச் மார்கனை திடீரென புற்றுநோய் பாதித்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக பாதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ரிச் மார்கனை அவரது உறவினர் ஒருவர் சந்திக்க சென்றார். அப்போது பீட்சா சாப்பிட இருவரும் ஆசைப்பட்டதும், இதற்காக மிச்சிகன் செல்ல திட்டமிட்டிருந்ததும் அவருக்கு தெரியவந்தது.

டோர் டெலிவரி

டோர் டெலிவரி

இதை கேள்விப்பட்ட அந்த உறவினர், மிச்சிகனில் உள்ள பீட்சா கடையை தேடிப்பிடித்து அங்கு போன் செய்தார். அந்த கடைக்காரரிடம் நடந்த விவரங்களை எல்லாம் சொன்னார். ஆனால் எத்தனையோ பீட்சா கடை அந்த பகுதியில் இருந்தாலும் இந்த கடையில் மட்டும் டோர் டெலிவிரியே கிடையாதாம்.

362 கி.மீ. தூரம்

362 கி.மீ. தூரம்

ஆனாலும் இதனை கேள்விப்பட்ட அந்த பீட்சா கடையில் வேலை பார்க்கும் 18 வயது இளைஞர் ஒருவர், ரிச் மார்கன்-ஜூலி தம்பதிக்கு பீட்சா டெலிவரி செய்ய மனமுவந்து ஒப்புக் கொண்டார். அதற்காக 362 கி.மீ. தூரம் பயணம் செய்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரிச் மார்கனுக்கும், ஜூலிக்கும் பீட்சாவை கொண்டு வந்து டெலிவரி செய்தார். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை கேள்விப்பட்ட பலரும் இளைஞருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

English summary
Pizza shop makes 360 km delivery for cancer patient
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X