பிலிப்பைன்ஸில் எலும்புக்கூடுகளுடன் கிடந்த விமான பாகம்: மாயமான மலேசிய விமானத்தினுடையதா?
மணிலா: பிலிப்பைன்ஸில் பல எலும்புக்கூடுகளுடன் கிடந்த விமானத்தின் பகுதி மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. ஆனால் விமானத்தின் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீயூனியன் தீவில் கிடைத்த விமானத்தின் வால் பகுதி மாயமான விமானத்தினுடையது என்று கூறப்பட்டது. இந்நிலையில் பிலிப்பைன்ஸில் உள்ள சுக்பாய் தீவில் இருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதியில் பல எலும்புகளுடன் கூடிய விமானத்தின் பாகம் கிடைத்துள்ளது.
ஜமில் உமர் என்பவர் மலேசிய போலீசாருக்கு போன் செய்து தனது உறவினர் சித்தி கயாம் மற்றும் பிறர் பறவைகளை வேட்டையாடச் சென்றபோது விமானத்தின் பாகம் ஒன்று கிடந்ததாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
அந்த பாகத்தின் மீது சித்தி ஏறிப் பார்த்தபோது அதில் பல எலும்புக்கூடுகள் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன் அருகே 70 இன்ச் நீளமும், 35 இன்ச் அகலமும் கொண்ட மலேசிய கொடி ஒன்றும் கிடந்துள்ளது என்றார்.
இது குறித்து உண்மையை கண்டறிய உதவுமாறு மலேசிய போலீசார் பிலிப்பைன்ஸ் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications