For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துணைக்கு ஒரு ஸ்டார் கூட இல்லாமல் அதுபாட்டுக்கு சுற்றிக் கொண்டிருக்கும் கிரகம்...!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உங்களுக்கு விரக்தி வந்தால் என்ன செய்வீர்கள்.. யாருடனும் பேச மாட்டீர்கள். அமைதியாக இருப்பீர்கள். உங்கள் பாட்டுக்குத் திரிவீர்கள்.. துணைக்குக் கூட யாரையும் நாட மாட்டீர்கள்... அதே மாதிரி, ஒரு கிரகம் தனியாக, துணைக்கு ஒரு நட்சத்திரம் கூட இல்லாமல் அது பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகம், சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ளது. இந்த கிரகத்தைச் சுற்றிலும் எதுவுமே இல்லையாம். அது மட்டுமே மிதந்து கொண்டிருக்கிறதாம்.

ஒரு நட்சத்திரம் கூட இல்லாமல், ஒரு கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் ஆச்சரியத்துடன் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பூராவும் காஸ்தான்...

பூராவும் காஸ்தான்...

இந்த கிரகம் முழுக்க வாயுக்களால் நிரம்பியுள்ளது. இதற்கு, PSO J318.5-22 என்று பெயர் வைத்துள்ளனர்.

பூமியிலிரு்து 80 ஒளியாண்டுகளுக்கு அப்பால்

பூமியிலிரு்து 80 ஒளியாண்டுகளுக்கு அப்பால்

பூமிக்கு ரொம்பப் பக்கத்தில்தான் இது உள்ளது. அதாவது 80 ஒளியாண்டுகளுக்கு அப்பால்..

ஜூபிடரை விட 6 மடங்கு வெயிட்

ஜூபிடரை விட 6 மடங்கு வெயிட்

ஜூபிடர் கிரகத்தை விட 6 மடங்கு அதிக எடையுடன் இது உள்ளது.

ரொம்ப ஜூனியர்

ரொம்ப ஜூனியர்

1.2 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த கிரகம் உருவானதாம். எனவே இந்தக் கிரகத்தை புதிதாகப் பிறந்த குழந்தை என்று விஞ்ஞானிகள் செல்லமாக கூறுகின்றனர்.

இப்படி இதற்கு முன்பு பார்த்ததில்லை

இப்படி இதற்கு முன்பு பார்த்ததில்லை

இதுகுறித்து ஹவாய் பல்கலைக்கழக ஆய்வுக் குழுத் தலைவர் மிக்கல் லியூ கூறுகையில், இதற்கு முன்பு எந்த ஒரு நட்சத்திரமும் இல்லாமல் தனியாக ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதில்லை. எனவே இது வித்தியாசமாக இருக்கிறது. இதன் குண நலன்களை ஆராய்ந்து வருகிறோம். இந்த கிரகம் தனியாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது என்றார்.

கிட்டத்தட்ட சேது மாதிரி...

கிட்டத்தட்ட சேது மாதிரி...

சேது படத்தில் வரும் சீயான் விக்ரம் மாதிரி இந்த கிரகமும் தனித்தே காணப்படுகிறது. கிரகம் என்றால் கூடவே நட்சத்திரமும் இருக்கும் என்பதுதான் இதுவரை நாம் படித்தது, பார்த்தது.. ஆனால் இப்படி சோலோ கிரகமும் இருக்கிறது என்பதை இந்த புதிய கண்டுபிடிப்பு உணர்த்தியுள்ளது.

இன்னும் என்னென்ன அதிசயங்களை நாம் பார்க்கப் போகிறோமோ நமது காலத்திற்குள்....

English summary
Astronomers said Wednesday they have found a lonely planet outside the solar system floating alone in space and not orbiting a star. The gaseous exoplanet, dubbed PSO J318.5-22, is just 80 light years from Earth and has a mass only six times that of Jupiter. Having formed 12 million years ago, the planet is considered a newborn among its peers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X