For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் முதன் முறையாக தமிழ்ப் பள்ளி சான்றிதழுக்கு கல்வி மாவட்ட 'மொழி மதிப்பீடு’!

By Shankar
Google Oneindia Tamil News

டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்காவிலேயே முதன் முறையாக, தமிழ்ப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் தேர்வு இல்லாமல், கல்வி மாவட்ட 'மொழி மதிப்பீடு (language credit)' வழங்கப்பட உள்ளது.

டல்லாஸ் மாநகரத்தில் இயங்கி வரும் ப்ளேனோ தமிழ்ப் பள்ளியின் 16 வது ஆண்டு விழா கொண்டாடப் பட்டது. சிறப்பு விருந்தினர்களாக ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்ட அறங்காவலர்கள் டெபி கிலஸ்பி, ஜான் க்ளஸ் மற்றும் ப்ரையன் டாட்சன் பங்கேற்றனர்.

Plano Tamil School gets language credit in US

கூடுதல் தேர்வு இல்லாமலே..

ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்டத்தில் வெளி நாட்டு மொழி மதிப்பெண்களுக்கு தமிழ் மொழி சேர்க்கப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அதற்காக சிறப்புக் கொள்கை ஒன்றை ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்டம் வரையறுத்துள்ளது.

டெக்சாஸ் மா நிலத்திலேயே இப்படி மொழி மதிப்பெண்களுக்கான சிறப்புக் கொள்கை வரையறை ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்டத்திலேயே முதன் முதலாக செய்யப்பட்டுள்ளது.

இதன் படி, தனியாக இயங்கும் கல்வி நிறுவனங்கள் Texas Education Agency Private Schools Commission (TESPAC) அனுமதி பெற்ற ஏஜென்சி மூலம் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் பள்ளியின் பாடத் திட்டங்கள் Texas Essential Knowledge and Skills Standards for World Languages (TEKS) க்கு ஏற்றதாக இருக்க வேண்டும்

இந்த இரண்டு வரையறைகளும் பின்பற்றப் படும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, குறிப்பிட்ட மொழியில் கூடுதல் தேர்வு இல்லாமல், பள்ளிச் சான்றிதழ் அடிப்படிடையிலேயே மொழி மதிப்பெண்கள் வழங்கப்படும்

Plano Tamil School gets language credit in US

அமெரிக்காவிலேயே முதல் முறையாக..

அமெரிக்காவின் பிற மாநிலங்களில் ஏற்கனவே மொழி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏராளமான தமிழ்ப் பள்ளிகள் அதற்கான அங்கீகாரம் பெற்று மாணவர்கள் பலன் அடைந்து வருகிறார்கள். அந்த கல்வி மாவட்டங்களில் மாணவர்கள் தனியாக தேர்வு ஒன்று எழுதி அதில் பாஸாக வேண்டும்.

டெக்சாஸில் முதன் முறையாக, ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்டத்தில் இத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இங்கு கூடுதல் தேர்வு தேவையில்லை.

ஃப்ரிஸ்கோ மாவட்டத்தில் இந்த மொழி மதிப்பீட்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் பள்ளி ப்ளேனோ தமிழ்ப் பள்ளியாகும். டல்லாஸ் மாநகரத்தில் வேற்று மொழிக்காக மதிப்பெண் கிடைக்கப் பெறும் பள்ளியும் இதுவே ஆகும்

ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 2017-18 ஆண்டு முதல் மொழி மதிப்பெண்கள் கிடைக்க உள்ளது. ஆண்டு தொடக்கத்திலேயே, மாணவர்கள் தாங்கள் பயிலும் ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்ட பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆண்டு இறுதியில் தமிழ்ப் பள்ளி சான்றிதழ் அடிப்படையில் மொழி மதிப்பெண் வழங்கப்படும்.

ப்ரிஸ்கோ கல்வி மாவட்டத்தை தொடர்ந்து, அருகாமையில் உள்ள பிற கல்வி மாவட்டங்களிலும் இத்தகைய மொழி மதிப்பெண் திட்டத்தை விரிவுபடுத்த முயற்சி எடுத்து வருவதாக, ப்ளேனோ தமிழ்ப் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆண்டு விழா நிகழ்ச்சிகள்..

ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்ட அறங்காவலர்கள், பள்ளி மாணவர்களின் ஆண்டு விழா நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர்.

Plano Tamil School gets language credit in US

மழலை முதல் நிலை எட்டு வரையிலும் பயிலும்அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில் மேடை நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இயல் இசை நாடகம் என முத்தமிழையும் எடுத்துக் காட்டும் வகையில் நாடகம், நடனங்கள் இடம்பெற்றன.

ராதிகா வரவேற்புரை ஆற்றினார். ஸ்ரீராம் விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். மகாலஷ்மி மற்றும் ரம்யா தொகுத்து வழங்கினார்கள் விசாலாட்சி வேலு நன்றி தெரிவித்தார்.

கல்வி மாவட்டத்தில் வேற்று மொழி மதிப்பெண் கட்டாயம் என்ற நிலையில் ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ் கற்க வேண்டிய நிலை இருந்தது.

தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், தாய் மொழியை கற்பதோடு, கல்வி மாவட்ட மதிப்பெண்ணும் பெறும் நிலைக்கு உயர்வதற்கு அமெரிக்கத் தமிழர்களின் அயராத உழைப்பே காரணமாகும்.

தாய் மொழிக்காக தன்னலம் பாராமல் உழைக்கும் அமெரிக்கத் தமிழர்கள் போற்றுதலுக்கு உரியவர்களே.

-இர தினகர்

English summary
Frisco School District in Texas has approved Plano Tamil School for language credit. Students graduating from Plano Tamil School will get the required language credit to complete the course. As per Frisco ISD process, students are not required to take additional examination and it is learnt this is the first school district in entire US to introduce this process.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X