For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்புங்க மக்களே நம்புங்க... "பிளேபாய்" திருந்தப் போகுதாம்.. நிர்வாணத்தை நிறுத்தப் போகுதாம்!

Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்செலஸ்: இன்டர்நெட்டைத் திறந்தால் நிர்வாணப் படங்கள் கொட்டிக் கிடப்பதால் இனி்மேல் தனது இதழ்களில் கவர்ச்சி மாடர் அழகிகளின் முழு நிர்வாணப் படங்களை போடுவதில்லை என்ற முடிவுக்கு பிரபல பிளேபாய் இதழ் முடிவு செய்துள்ளதாம்.

பிளேபாய் பத்திரிகை பெண்களின் நிர்வாணப் படங்களுக்குப் பெயர் போனது. அட்டை டூ அட்டை கவர்ச்சிப் படங்களை போட்டு நிரப்பி வெளி வரும் இதழ் இது.

இந்தப் படங்களுக்காகவே இந்தியாவில் இந்ததப் பத்திரிகைக்கு தடை உள்ளது. இந்த நிலையில் இனிமேலும் முழு நீள நிர்வாணப் படங்களை பிரசுரிப்பதில்லை என்ற முடிவுக்கு பிளேபாய் வந்துள்ளதாம்.

இதை பிளேபாய் நிறுவனர் ஹியூக் ஹெப்னர் (தாத்தாவுக்கு வயது 89), தலைமை செயலதிகாரி ஸ்காட் பிளான்டர்ஸ் ஆகியோர் நியூயார்க் டைம்ஸுக்கு அளித் பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்தாண்டு மார்ச் முதல்

அடுத்தாண்டு மார்ச் முதல்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு நீள நிர்வாணப் படங்கள் பிளேபாய் இதழில் இடம் பெறாது என்ற முடிவை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

62 வயசு

62 வயசு

பிளேபாய் இதழ் 62 ஆண்டுகளைத் தொட்டுள்ளது. இதையடுத்து அதற்குப் புதுவடிவம் கொடுத்துள்ளார் ஹெப்னர். நிர்வாணப் படங்கள் இருக்காது என்றாலும் கூட மாதாந்திர அழகி பகுதியும், பெண்களின் கவர்ச்சிப் படங்களும் தொடர்ந்து இடம் பெறுமாம்.

13 வயசுத்து உட்பட்டோர் பார்க்கப்படாது

13 வயசுத்து உட்பட்டோர் பார்க்கப்படாது

மேலும் இந்த இதழுக்கு தொடர்ந்து அமெரிக்க அரசின் பிஜி 13 என்ற ரேட்டிங் தொடருமாம். பிஜி 13 என்பது 13 வயதுக்குட்பட்டோர் பார்க்கக் கூடாதவை என்று அர்த்தம்.

இன்டர்நெட்டில் கொட்டிக் கிடப்பதால்

இன்டர்நெட்டில் கொட்டிக் கிடப்பதால்

இந்த முடிவு குறித்து பிளான்டர்ஸ் கூறுகையில், இப்போது இன்டர்நெட்டில் நிர்வாணப் படங்களுக்கு பஞ்சமே இல்லை. பட்டனைத் தட்டினால் போதும் இலவசமாகவே ஏகப்பட்ட படங்கள் கிடைக்கிறது. எனவே நிர்வாணம் என்பது இப்போது மிகவும் சாதாரணமாகி விட்டது என்றார் அவர்.

புதுப் புதுப் பகுதிகள்

புதுப் புதுப் பகுதிகள்

பிளேபாயில் சில புதிய மாற்றங்களும் இடம் பெறப் போகின்றன. "sex-positive female"அதில் ஒன்று. இது இளைஞர்களை அதிகம் கவரும் என்பது பிளான்டர்ஸின் நம்பிக்கையாகும்.

இணையதளத்தையும் மாற்றியாச்சு

இணையதளத்தையும் மாற்றியாச்சு

பிளேபாய் இதழின் இணையதளப் பக்கமும் கூட புதுப்பிக்கப்பட்டு விட்டது. வேலை பார்க்கும் இடங்களில் யாருக்கும் சங்கடம் இல்லாத வகையில் பார்க்கும் வகையில் மாற்றியுள்ளனராம்.

லாபமெல்லாம் இல்லையாம்

லாபமெல்லாம் இல்லையாம்

அமெரிக்க பிளேபாய் இதழ் முன்பு போல லாபகரமானதாக இல்லையாம். இருப்பினும் சர்வதேச அளவில் பிளேபாய்க்கு தொடர்ந்து கிராக்கி உள்ளதாம். அதில் லாபமும் கிடைத்து வருகிறதாம்.

சர்க்குலேஷன் காலி

சர்க்குலேஷன் காலி

கடந்த 1975ம் ஆண்டு சர்வதேச அளவில் இதன் மொத்த சர்க்குலேஷன் 50.6 லட்சமாக இருந்தது. ஆனால் தற்போது மொத்தமே 8 லட்சம் பிரதிகள்தான் விற்பனையாகிறதாம்.

முதல் அழகி மர்லின் மன்றோ

முதல் அழகி மர்லின் மன்றோ

1953ம் ஆண்டு வெளியான பிளேபாய் முதல் இதழின் அட்டைப் படத்தில் மர்லின் மன்றோவின் படம் இடம் பெற்றிருந்தது. அந்த இதழில் ஹெப்னர் எழுதுகையில் 18 முதல் 80 வயது வரையிலானவர்களுக்கான இதழ் இது என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ் பெற்ற நடிகைகள், மாடல்கள்

உலகப் புகழ் பெற்ற நடிகைகள், மாடல்கள்

பிளேபாய் இதழில் உலகப் புகழ் பெற்ற நடிகைகள், மாடல் அழகிகளின் கவர்ச்சிப் படங்கள், நிர்வாணப் படங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Playboy magazine will stop publishing pictures of fully nude women because the ubiquity of internet pornography has made such images “passé”, the company’s chief executive has revealed. In an interview with the New York Times, CEO Scott Flanders said founder Hugh Hefner, 89, had agreed with a proposal to stop publishing images of naked women from March 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X