For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப்யூட்டிஃபுல் புளுட்டோ.. 10.000 கி.மீ தூரத்தில் நெருங்கிச் சென்று "கிளிக்"கிய நியூ ஹாரிஸான்ஸ்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் ப்ளூட்டோவை அடைந்து விட்டதை சிக்னல்கள் அனுப்பி உறுதி செய்துள்ள நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம், புளூட்டோ மீது பறந்தபோது எடுத்த புதிய படம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். இதுரை பார்த்திராத புதிய கோணத்தில் திரில்லாக இருக்கிறது புளூட்டோவின் தோற்றம். புளூட்டோவின் தரைப் பரப்பிலிருந்து 10,000 கிலோமீட்டர் தூரத்திலிருந்து இந்தப் படத்தை எடுத்துள்ளது நியூ ஹாரிஸான்ஸ்.

புளூட்டோ கிரகத்தை ஆராய அமெரிக்க விண்வெளி மையம் நாசா கடந்த 2006ம் ஆண்டு ‘நியூ ஹரிஸான்ஸ் விண்கலத்தை அனுப்பியது. நியூ ஹரிசோன்' விண்கலம் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் 482 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து புளூட்டோ கிரகத்தை வெற்றிகரமாக அடைந்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், ப்ளூட்டோவை வெற்றிகரமாக கடந்தது குறித்து நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் பூமிக்கு சிக்னல் அனுப்பியது. ப்ளூட்டோவைக் கடக்க ஆரம்பித்த 13 மணி நேரத்திற்குப் பின்னர் இந்த சிக்னல் வந்தது. தற்போது புளுட்டோவை நியூ ஹாரிஸான்ஸ் எடுத்த புதிய படமும் வெளியாகியுள்ளது.

பதட்டம்...

பதட்டம்...

முன்னதாக திட்டமிட்டபடி தனது செயல்பாடுகளை நியூஹாரிஸான்ஸ் மேற்கொண்டதா என்பதை அறிய விஞ்ஞானிகள் பெரும் பதட்டத்துடன் காத்திருந்தனர். இதனால் வெற்றியைக் கூட முழுமையாக கொண்டாடாமல் காத்திருந்தனர்.

வெற்றி...

வெற்றி...

இந்த நிலையில்தான் புளூட்டோவை நியூ ஹாரிஸான்ஸ் கடக்கத் தொடங்கி 13 மணி நேரத்திற்குப் பின்னர் பூமிக்கு சிக்னல் வந்தது. இதையடுத்து திட்டம் முழு வெற்றி என்று நாசா அறிவித்துள்ளது.

ஒபாமா வாழ்த்து...

ஒபாமா வாழ்த்து...

சிக்னல் வரப் பெற்றதைத் தொடர்ந்து நாசாவில் விஞ்ஞானிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா நாசாவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

புதிய படம்

புதிய படம்

மேலும் புளூட்டோவின் புதிய படம் ஒன்றையும் நியூ ஹாரிஸான்ஸ் அனுப்பி வைத்துள்ளது. 1993ம் ஆண்டு ஹப்பிள் தொலைநோக்கி முதல் முறையாக எடுத்த புளுட்டோவின் படத்துக்கும், தற்போது நியூ ஹாிஸான்ஸ் எடுத்துள்ள படத்திற்கும் அப்படி ஒரு வித்தியாசம்.

என்ன அழகு

என்ன அழகு

1993ல் எடுத்த படத்தில் பெரிய நெருப்புக் கோளம் போல காணப்பட்டது புளூட்டோ. ஆனால் தற்போது நியூ ஹாரிஸான்ஸ் எடுத்து அனுப்பியுள்ள லேட்டஸ்ட் படத்தில் மிக அழகாக, நன்கு தெளிவாகத் தெரிகிறது புளூட்டோ.

மேலும் படங்கள் வருகிறது

மேலும் படங்கள் வருகிறது

இதை விட இன்னும் தெளிவான படங்களையும் நியூ ஹாரிஸான்ஸ் எடுத்துள்ளது. அதை டவுன்லிங் செய்து வருகிறார்கள் நாசா விஞ்ஞானிகள். அதில் புளூட்டோவை மேலும் தெளிவாக நாம் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மனித விண்கலம்...

முதல் மனித விண்கலம்...

ப்ளூட்டோவுக்கு விஜயம் செய்த முதல் மனித விண்கலம் நியூ ஹாரிஸான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நாசாவிற்கு 700 மில்லியன் டாலர்கள் செலவில் இந்த வெற்றி கிட்டியுள்ளது.

எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

இனிமேல் ப்ளூட்டோ தொடர்பான படங்கள், வரைபடங்கள் உள்ளிட்டவற்றை நியூ ஹாரிசான்ஸ் அனுப்ப உள்ளது. எனவே, அதன் மூலம் ப்ளூட்டோ குறித்து மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விஞ்ஞானிகள் உள்ளனர்.

English summary
NASA's New Horizons spacecraft got humanity's first up-close look at Pluto on Tuesday, sending word of its triumph across 3 billion miles to scientists waiting breathlessly back home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X