For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'செல்லாது செல்லாது' என்று விஞ்ஞான 'நாட்டாமை'களால் நிராகரிக்கப்பட்டு இன்று புல்லரிக்க வைத்த புளூட்டோ!

Google Oneindia Tamil News

புளோரிடா: மறக்க முடியாத நாட்கள் இவை.. 1930 தொடங்கி 2015ம் ஆண்டு ஜூலை 15 வரையிலான இந்தத் தேதிகள் மனித குலத்திற்கு முக்கியமானவை. ஆம், 9வது கிரகம் என்று அறிவிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே "செல்லாது செல்லாது" என்று விஞ்ஞான நாட்டாமைகளால் நிராகரிக்கப்பட்ட புளுட்டோ கிரகத்தின் தோற்றம் இன்று ஆச்சரியப்படும் அளவுக்கு நம் முன் விரிந்து நின்று வியாபித்த நாட்கள் இவை.

முதன் முதலாக நமக்கு புளூட்டோவைக் கண்ணில் காட்டியது அமெரிக்காவின் ஹப்பிள் தொலைநோக்கிதான். பூமிக்கு வெளியே உள்ள பல்வேறு விஞ்ஞான அதிசயங்களை நமக்கு காட்டிய பெருமை இந்த ஹப்பிளுக்கு உண்டு.

பல காலமாக புளூட்டோவின் உண்மையான வடிவம், அதில் என்ன உள்ளது என்பது நமக்குத் தெரியாமலேயே இருந்து வந்தது. இன்று நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் புளூட்டோவுக்குப் பக்கத்தில் போய் எடுத்துக் கொடுத்துள்ள படங்கள்தான் புளூட்டோ குறித்து நமக்கு நிறைய உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

1930ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட புளுட்டோ குறித்த புகைப்படங்கள் தொடர்பான ஒரு ரவுண்ட் அப்.

1930ம் ஆண்டு.. ஒரு புள்ளியாக

1930ம் ஆண்டு.. ஒரு புள்ளியாக

1930ம் ஆண்டு விண்வெளியியலாளர் கிளைட் டோம்பாக் முதல் முறையாக புளூட்டோவைக் கண்டுபிடித்தார். லோவெல் அப்சர்வேட்டரி மூலம் இதுகுறித்து முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. லோவெல் தொலைநோக்கியில் ஒரு புள்ளி போல காணப்பட்டது புளூட்டோ. முதலில் இதற்கு நெப்ட்யூனுக்கு தொலைவில் உள்ள ஒரு புதிய கிரகம் என்றுதான் இதைக் கூறினர். பின்னர்தான் இதற்கு புளூட்டோ என்று பெயரிடப்பட்டது. 1930ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் புளூட்டோ படம் எடுக்கப்பட்டது.

1994, மே 16.. சுட்டெரிக்கும் நெருப்புக் கோளம் போல

1994, மே 16.. சுட்டெரிக்கும் நெருப்புக் கோளம் போல

1994ம் ஆண்டு மே 16ம் தேதி ஹப்பிள் தொலைநோக்கி புளூட்டோவை சற்று நெருக்கமாக படம் பிடித்துக் கொண்டு வந்தது. பார்ப்பதற்கு பெரிய நெருப்புக் கோளம் போல இது காணப்பட்டது. கூடவே சரோன் நிலவும் தெளிவாகத் தெரிந்தது. புளூட்டோவின் சற்று தெளிவான படம் இது. பூமியிலிருந்து 4.4 கோடி கிலோமீட்டர் தொலைவில் புளூட்டோ இருப்பது தெரிய வந்தது. இது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான தொலைவ விட 30 மடங்கு அதிகமாகும்.

1996, மார்ச் 7.. முதல் தெளிவான படம்

1996, மார்ச் 7.. முதல் தெளிவான படம்

புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டு 66 ஆண்டுகள் கழித்துத்தான் அதன் முதல் முழுமையான தெளிவான படம் நமக்குக் கிடைத்தது. இதை நமக்கு அளித்தது ஹப்பிள் தொலைநோக்கியாகும். புளுட்டோவை இதில் சற்று தெளிவாகக் காண முடிந்தது. புளூட்டோவின் முழு வடிவமும் இதில் நமக்குத் தெரிந்தது.

2002-03... புளூட்டோவில் வானிலை மாற்றங்கள்

2002-03... புளூட்டோவில் வானிலை மாற்றங்கள்

2002-2003ம் ஆண்டுகளில் ஹப்பிள் எடுத்த இந்தப் புதிய படங்களில் புளூட்டோ கிரகத்தில் வானிலை மாற்றங்கள் ஏற்படுவது தெரிய வந்தது. இதுவரை எடுக்கப்பட்ட படங்களை விட இதில் மேலும் பல தகவல்கள் நமக்குக் காணக் கிடைத்தன. இருந்தாலும் புளூட்டோ கிரகத்தில் உள்ள மலைகள், பாறைத் தொடர்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. அதேசமயம், இந்தப் படத்தில் காணப்பட்ட வண்ணத்திற்கு, கிரகத்தில் ஏற்பட்ட அல்ட்ரா வயலட் கதிர்வீச்சுதான் காரணம் என்று தெரிய வந்தது.

2011, ஜூலை 20.. மேலும் 3 நிலவுகள் கண்டுபிடிப்பு

2011, ஜூலை 20.. மேலும் 3 நிலவுகள் கண்டுபிடிப்பு

2011ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி புளூட்டோவைச் சுற்றி மேலும் 3 நிலவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2வது நிலவுக்கு முதலில் பி4 என பெயரிடப்பட்டது. மற்ற 2 குட்டி நிலவுகளுக்கு நிக்ஸ், ஹைட்ரா என பெயரிடப்பட்டது. சரோனைத் தவிர மற்ற நிலவுகள் மிகச் சிறியவை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

2015, ஏப்ரல் 14... நியூ ஹாரிஸானின் முதல் படம்

2015, ஏப்ரல் 14... நியூ ஹாரிஸானின் முதல் படம்

நாசா அனுப்பிய நியூ ஹாரிஸான் விண்கலம் தனது முதல் படத்தை 2015ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி அனுப்பியது. அதில் புளூட்டோ மற்றும் சரோன் நிலவின் முதல் வண்ணப் படம் நமக்குக் கிடைத்தது. நியூ ஹாரிஸானில் பொருத்தப்பட்டிருந்த ரால்ப் கலர் இமேஜர் இந்தப் படங்களை நமக்கு எடுத்து அனுப்பியது. இதுதான் புளுட்டோ வின் முதல் கலர் படமாகும். இந்த படத்தில் காணப்படும் சரோன் நிலவானது, அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரின் சைசில் உள்ளது. புளூட்டோவிலிருந்து 115 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிலிருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.

2015, மே 27.. மேலும் கூடுதல் விவரங்கள்

2015, மே 27.. மேலும் கூடுதல் விவரங்கள்

நியூஹாரிஸான்ஸ் கடந்த மே 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை எடுத்த படங்கள் பூமிக்கு வந்து சேர்ந்தன. அவற்றில் புளூட்டோ குறித்த மேலும் பல தகவல்கள் நமக்குக் கிடைத்தன. இப்போது புளூட்டோ கிரகம் நன்கு பெரிதாக தெரிந்தது. புளூட்டோ 6.4 பூமி நாட்களுக்கு ஒருமுறை தன்னைத் தானேச் சுற்றி வருவதும் தெரிய வந்தது.

2015, ஜூன் 11.. புளூட்டோவின் முகங்கள்

2015, ஜூன் 11.. புளூட்டோவின் முகங்கள்

லாரி என்ற இமேஜர் மூலம் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் எடுத்த படங்கள் இவை. இதில் புளூட்டோவின் நான்கு வகையான உருவங்கள் காணப்பட்டன. புளூட்டோவை ஒவ்வொரு கோணத்திலும் லாரி எடுத்த படம் இது.

2015, ஜூன் 22.. மேலும் நெருங்கிய நியூ ஹாரிஸான்ஸ்

2015, ஜூன் 22.. மேலும் நெருங்கிய நியூ ஹாரிஸான்ஸ்

புளூட்டோவை மேலும் நெருங்கிய நிலையில் நியூஹாரிஸான்ஸ் எடுத்த படங்கள் இவை. இந்தப் படங்களில் மிகப் பெரிய உருவமாக புளூட்டோ காணப்பட்டது. இப்போது புளூட்டோவின் தரைப் பரப்பிலிருந்து 31 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் நியூஹாரிஸான்ஸ் இருந்தது.

2015, ஜூலை 6.. மூன்று முகம்

2015, ஜூலை 6.. மூன்று முகம்

புளூட்டோவை 3 விதமான கோணத்தில் இந்தப் படங்கள் நமக்குக் காட்டின. இந்தப் படங்களில் புளூட்டோ கிரகத்தில் மர்மமான கரும்படலம் காணப்படுவது தெரிய வந்தது. அது என்ன என்பது குறித்து விவாதங்கள் கிளம்பின. ஒவ்வொரு கரும்படலமும் பல நூறு மைல்கள் நீளம் கொண்டவையாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டது.

2015, ஜூலை 6.. இன்னும் நெருக்கமாக

2015, ஜூலை 6.. இன்னும் நெருக்கமாக

இந்தப் படம் புளூட்டோவின் தரைப்பரப்பிலிருந்து 12.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிலிருந்து எடுக்கப்பட்டதாகும். இதில் இன்னும் நெருக்கமாக புளூட்டோவைப் பார்க்க முடிந்தது.

2015, ஜூலை 8.. புளூட்டோவின் இதயம்

2015, ஜூலை 8.. புளூட்டோவின் இதயம்

இந்தப் படத்தில் புளூட்டோவில் இதயம் போன்ற வடிவம் காணப்பட்டு அனைரையும் அதிசயிக்க வைத்தது. புளூட்டோவிலிருந்து 8 மில்லியன் கிலோமீட்டர் தூரத்திலிருந்து இது எடுக்கப்பட்டது. இந்த இதயம் போன்ற பகுதியானது 2000 கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் என கணிக்கப்பட்டது.

2015 ஜூலை 10... மண்ணியல் அம்சங்கள்

2015 ஜூலை 10... மண்ணியல் அம்சங்கள்

இந்தப் படத்தில் புளூட்டோவின் மண்ணியல் அம்சங்கள் குறித்த தகவல்கள் நமக்குக் கிடைத்தன. அதன் தரைப் பரப்பும் சற்று தெளிவாக காணப்பட்டது.v

2015, ஜூலை 11..புதிர் பகுதிகள்

2015, ஜூலை 11..புதிர் பகுதிகள்

இந்தப் படத்தில் புளூட்டோ கிரகத்தில் காணப்படும் சில புதிரான பகுதிகளைக் காண முடிந்தது. ஜூலை 11ம் தேதி காலையில் இந்தப் படத்தை எடுத்து அனுப்பியது நியூ ஹாரிஸான்ஸ். புளூட்டோவிலிருந்து 40 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலிருந்து இந்தப் படத்தை எடுத்தது லாரி.

2015, ஜூலை 13.. கலர் கொடுக்கப்பட்ட புளூட்டோ, சரோன்

2015, ஜூலை 13.. கலர் கொடுக்கப்பட்ட புளூட்டோ, சரோன்

கலர் கொடுக்கப்பட்ட புளூட்டோ மற்றும் சரன் நிலவின் தோற்றம். புளூட்டோ மற்றும் சரன் ஆகியவற்றின் நிலப்பரப்பில் உள்ள மாற்றங்களை அறிவதற்காக இப்படி செயற்கையாக கலர் கொடுக்கப்பட்டு புகைப்படங்களை வெளியிட்டது நாசா.

2015, ஜூலை 14.. வெற்றிகரமாக புளூட்டோவை தொட்ட நியூ ஹாரிஸான்ஸ்

2015, ஜூலை 14.. வெற்றிகரமாக புளூட்டோவை தொட்ட நியூ ஹாரிஸான்ஸ்

இது புளூட்டோவை நியூஹாரிஸான்ஸ் விண்கலம் திட்டமிப்படி கிட்ட வந்து எட்டிப் பார்ப்பதற்கு முதல் நாள் எடுத்த படம். இந்தப் படத்தில் புளூட்டோவின் இதய வடிவம் மிகத் தெளிவாகத் தெரிந்தது.

2015, ஜூலை 15.. பனி மலைகள்

2015, ஜூலை 15.. பனி மலைகள்

புளூட்டோவை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நியூ ஹாரிஸான்ஸ் கடந்தபோது எடுத்த இந்தப் புதிய லேட்டஸ்ட் படத்தில் அந்த கிரகத்தில் ஏராளமான பனி மலைகள் இருப்பதும், பள்ளத்தாக்குள் இருப்பதும் தெரிய வந்தது.

புளூட்டோவில் பொதிந்து கிடக்கும் மேலும் பல மர்மங்கள், ஆச்சரியங்களை வரும் நாட்களில் நியூ ஹாரிஸான்ஸ் நமக்குக் கொடுக்கப் போகும் படங்கள் காட்டப் போகின்றன.. காத்திருப்போம்.. கண்டு களிக்க.

English summary
This animation combines various observations of Pluto over the course of several decades. The first frame is a digital zoom-in on Pluto as it appeared upon its discovery by Clyde Tombaugh in 1930 (image courtesy Lowell Observatory Archives). The other images show various views of Pluto as seen by NASA's Hubble Space Telescope beginning in the 1990s and NASA's New Horizons spacecraft in 2015. The final sequence zooms in to a close-up frame of Pluto released on July 15, 2015.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X