For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்ளூட்டோவை மேலும் நெருங்கும் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம்.. நாளை கடக்கிறது

Google Oneindia Tamil News

நாசா: ப்ளூட்டோ ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நாசாவின் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது திட்டமிட்டபடி தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. நாளை காலை அது திட்டமிட்டபடி ப்ளூட்டோ கிரகத்தை கடக்கவுள்ளது.

கிட்டத்தட்ட ஒன்பதரை ஆண்டு காலம் பயணம் செய்து ப்ளூட்டோவை நெருங்கியுள்ளது இந்த விண்கலம். இன்னும் 2 நாட்களே உள்ளது இந்த விண்கலம் வரலாறு படைக்க.

நாளை காலை அது ப்ளூட்டோவைக் கடந்து செல்லவுள்ளது. அப்போது மணிக்கு 12,500 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

வாசல்படி...

வாசல்படி...

இதுகுறித்து நியூஹாரிஸான்ஸ் முதன்மை ஆய்வாளர் அலன் ஸ்டெர்ன் கூறுகையில், இப்போது நாம் ப்ளூட்டோ கிரகத்தின் வாயிற்படிக்கு வந்து விட்டோம். இதனால் அனைவரும் திரில்லாக இருக்கிறோம்.

புதிய தகவல்கள்...

புதிய தகவல்கள்...

அதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நாளை மறு நாள் ப்ளூட்டோ கிரகம் குறித்த பல புதிய தகவல்கள் நமக்குக் கிடைக்கும் என்றார்.

குட்டி கிரகம்...

குட்டி கிரகம்...

ப்ளூட்டோ கிரகமானது உறைநிலையில் உள்ள குட்டி கிரகமாகும். சூரியக் குடும்பத்திலிருந்து இது 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

முதல் விண்கலம்...

முதல் விண்கலம்...

ப்ளூட்டோவுக்கு விஜயம் செய்யும் முதல் மனித விண்கலம் நியூ ஹாரிஸான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The New Horizons spacecraft is just days away from a historic fly-by past Pluto after a journey of more than nine years into the solar system. Paul Chapman reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X