For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹாஹா... அப்படியே பூமி போல... பிரமிக்க வைக்கும் ப்ளூட்டோவின் புதுப் படம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ப்ளூட்டோ கிரகத்தின் புதிய படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்தப் படங்களைப் பார்க்கும்போது அப்படியே நம்ம பூமியைப் போலவே தோன்றுகிறது.

சூரிய அஸ்தமனத்தின்போது பூமியைப் பார்த்தால் எப்படி இருக்குமோ அதேபோல இருக்கிறது ப்ளூட்டோ கிரகத்தின் ஒரு பகுதி. பனி மலைகள், பனிப் பள்ளத்தாக்குகள் என பார்ப்பதற்கே அசத்தலாக உள்ளது ப்ளூட்டோ.

கிட்டத்தட்ட 1250 கிலோமீட்டர் பரப்பளவிலான ப்ளுட்டோவின் பகுதியை அவ்வளவு அழகாக படம் பிடித்துள்ளது நாசாவின் நியூ ஹாரிஸான் விண்கலம்.

ஆர்க்டிக் போல

ஆர்க்டிக் போல

இந்தப் படத்தில் ப்ளூட்டோவைப் பார்க்கும்போது பூமியின் ஆர்க்டிக் பகுதியைப் பார்ப்பது போலவே இருக்கிறது. இரண்டுமே ஒரே மாதிரியான தோற்றத்தைக் காட்டுகின்றன.

நைட்ரஜன் ஆறுகள்

நைட்ரஜன் ஆறுகள்

உறைநிலையில் உள்ள நைட்ரஜன் ஆறுகள், பனி மலைகள் இந்தப் படத்தில் காணப்படுகின்றன. இந்தப்படங்களை வெளியிட்ட பின்னர் நியூ ஹாரிஸான்ஸ் திட்ட முதன்மை அதிகாரி ஆலன் ஸ்டெர்ன் கூறுகையில், இவை பார்ப்பதற்கே அற்புதமாக உள்ளன. ப்ளூட்டோவின் அட்மாஸ்பியர் குறித்த புதிய தகவல்களை இதில் அறிய முடியும்.

பனி மலைகள்

பனி மலைகள்

ப்ளூட்டோவின் பனி மலைகள், தரைப்பரப்பு ஆகியவை குறித்தும் நாம் புதிய கோணத்தில் ஆராய வழிகிடைத்துள்ளது இந்தப் படங்கள் மூலம்.

ஜூலை 14ல் எடுத்த படம்

ஜூலை 14ல் எடுத்த படம்

இந்தப் படம் ஜூலை 14ம் தேதி எடுக்கப்பட்டதாகும். அன்று ப்ளூட்டோ கிரகத்தை நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் நெருங்கிச் சென்று கடந்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் செப்டம்பர் 13ம் தேதிதான் பூமிக்கு வந்து சேர்ந்துள்ளது.

ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்

ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்

கிரகத்தைக் கடந்து சென்ற நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது அப்படியே சூரினை நோக்கித் திரும்பிய நிலையில் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளது.

அழகிய ப்ளூட்டோ

அழகிய ப்ளூட்டோ

இந்தப் படத்தைப் பார்க்கும்போது அப்படியே பூமியைப் பிரதிபலிக்கிறது ப்ளூட்டோ. ஆனால் இங்கு தண்ணீர் ஐஸ் மலைகள் இல்லை. மாறாக நைட்ரஜன்தான் உறை நிலையில் உள்ளது. அது மட்டுமே வித்தியாசமாகும் என்றும் கூறினார் ஸ்டெர்ன்.

English summary
A near-sunset view of the rugged, icy mountains and flat ice plains extending to Pluto's horizon covering 1,250 km area has left scientists stunned as it has a familiar arctic look like we see on Earth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X