For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருப்பு மாஸ்க் அணிந்தபடி.. 9 நிமிடங்கள் முழங்காலிட்டு கருப்பினத்தவர்களுக்கான பேரணியில் கனடா பிரதமர்

Google Oneindia Tamil News

ஒட்டாவா: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் இனவெறிக்கு எதிராகவும் கனடாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தில் கடந்த 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு நீதி கோரி அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தின் போது டிரம்பை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பதுங்குகுழியில் தங்க வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஜார்ஜின் கொடூர கொலை.. வெள்ளை மாளிகை செல்லும் சாலையின் பெயரையே மாற்றிய மேயர்.. டிரம்ப் அதிர்ச்சி!ஜார்ஜின் கொடூர கொலை.. வெள்ளை மாளிகை செல்லும் சாலையின் பெயரையே மாற்றிய மேயர்.. டிரம்ப் அதிர்ச்சி!

படுகொலை

படுகொலை

இவ்வாறு நடைபெறும் போராட்டங்களை போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் , ரப்பர் தோட்டாக்களை வீசியும் கலைத்து வருகின்றனர். இந்தப் படுகொலையை முன்னாள் அதிபர் ஒபாமா கண்டித்தார். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் அடக்குமுறையை சந்தித்து வருகிறார்கள். இது போல் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரதமர்

பிரதமர்

இதனால் இந்த இனவெறியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் போராட்டம் நடைபெறுகிறது. அமெரிக்கா தவிர ஐரோப்ப நாடுகளிலும் இந்த போராட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் கனடா தலைநகர் ஒட்டாவாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீரென வந்து கலந்து கொண்டார்.

மரியாதை

மரியாதை

அவருடன் இணைந்து சோமாலியாவின் அமைச்சர் அகமது உசேனும் கலந்து கொண்டார். அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு மரியாதை செலுத்தும் வரையில் ஜஸ்டின் ட்ரூடோ முழங்காலிட்டு மௌன அஞ்சலி செலுத்தினார். இது போல் அவர் 9 நிமிடங்கள் அமர்ந்திருந்தார். அவர் கருப்பு நிற துணியினாலான மாஸ்க்கை அணிந்திருந்தார்.

Recommended Video

    George Floyd-பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?
    கொரோனா அச்சுறுத்தல்

    கொரோனா அச்சுறுத்தல்

    இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கருத்து கூறவோ பேட்டி அளிக்கவோ மறுத்துவிட்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் யாரும் ஒன்று கூட வேண்டாம் என கூறப்பட்ட நிலையில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Canadian PM Trudeau joined the Black Lives Matter protest by kneel downing against George Floyd Murder.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X