For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பானில் சவுதி இளவரசருடன் மோடி சந்திப்பு.. கை குலுக்கி உற்சாகம்.. இரு தரப்பு உறவு பற்றி பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi in G-20 summit | ஜி-20' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி- டிரம்ப்- ஷின்சா சந்திப்பு- வீடியோ

    டோக்கியோ: ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சவுதி, முடி இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து, இரு நாடுகள் நடுவேயான பல தரப்பு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின், ஒசாகா நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நேற்று அதிகாலை ஒசாகா சென்றடைந்தார் பிரதமர் மோடி. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபியை நேற்று அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    PM Modi holds bilateral meeting with Saudi Crown Prince

    இதையடுத்து இன்று காலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் மோடி. அடுத்ததாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து அவர் இரு தரப்பு உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது இரு தலைவர்களும் கை குலுக்கியும், கட்டியணைத்தும் கொண்டதை பார்க்க முடிந்தது.

    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்ட ட்வீட்டில், ஜி20 உச்சிமாநாட்டில், பிரதமர் மோடி, சவுதி அரேபியா முடி இளவரசர் முகமது பின் சல்மானுடன் சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது, இரு நாடுகள் நடுவேயான வர்த்தகம், முதலீடு, மின்சக்தி, பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்பட்டது. இவ்வாறு அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    PM Modi holds bilateral meeting with Saudi Crown Prince Mohammed bin Salman Al Saud on the margins of the G20. Discussed deepening cooperation in trade & investment, energy security, counter terrorism, among other areas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X