For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் பற்றி பேசவில்லை.. ஆனாலும்.. பணக்கார நண்பன் சவுதியை இழக்கும் பாக்... மோடியின் மூவ்!

காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இன்னொரு வெற்றிகரமான அடியை எடுத்து வைத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    PM Modi arrives at King Saud Palace in Riyadh

    ரியாத்: காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இன்னொரு வெற்றிகரமான அடியை எடுத்து வைத்துள்ளது. சவுதி முடி இளவரசருடன் நடந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு மறைமுக வார்னிங் கொடுத்துள்ளார்.

    இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தற்போது சவுதி அரேபியா சென்று இருக்கிறார். இவர் நேற்று சவுதி அரசர் சல்மான் மற்றும் முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரை சந்தித்தார்.

    இவர்கள் பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டனர். அதோடு இரண்டு நாட்டு உறவு, சர்வதேச பிரச்சனைகள் குறித்து மோடியும், முகமது பின் சல்மானும் நீண்ட நேரம் பேசினார்கள்.

    சீனாவின் போர் கப்பலிடம் ஜாக்கிரதை.. இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் வார்னிங்.. என்ன நடக்கிறது?சீனாவின் போர் கப்பலிடம் ஜாக்கிரதை.. இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் வார்னிங்.. என்ன நடக்கிறது?

    எதை பற்றி

    எதை பற்றி

    இந்த ஆலோசனையில் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய விஷயங்கள் பேசப்பட்டது. முக்கியமாக இந்தியாவுடன் கடற்படை பயிற்சி மேற்கொள்ள சவுதி ஒப்புகொண்டு இருக்கிறது. இந்த வருட இறுதியில் இந்தியா சவுதி இரண்டு நாடுகளில் இந்திய பெருங்கடலில் கடற்படை பயிற்சி மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விஷயம்

    விஷயம்

    அதேபோல் ஒரு நாட்டில் நடக்கும் உள்நாட்டு விஷயங்களில் இரண்டு நாடுகளும் தலையிடாது என்று இந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து உறவு நீடிக்கும். ஆனால் உள்நாட்டு பிரச்சனையில் தலையிட மாட்டோம் என்று இரண்டு நாடுகளும் உறுதி பூண்டு இருக்கிறது.

    சர்வதேச அமைப்புகள்

    சர்வதேச அமைப்புகள்

    அதேபோல் சர்வதேச அமைப்புகள் நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் தலையிட கூடாது. அந்த அமைப்புகள் பிற நாடுகள் சவுதி மற்றும் இந்தியாவில் உள்நாட்டு விஷயத்தில் தலையிடுவதையும் தடுக்க வேண்டும். என்று இந்த ஆலோசனையில் பேசப்பட்டு இருக்கிறது. இந்த 2 மணி நேர ஆலோசனை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    ஆலோசனை எப்படி

    ஆலோசனை எப்படி

    இரண்டு நாடுகளும் இந்த ஆலோசனையில் காஷ்மீர் குறித்தோ, பாகிஸ்தான் குறித்தோ பேசவில்லை. ஆனால் உள்நாட்டு விஷயத்தில் தலையிட கூடாது என்று கூறியதன் மூலம், பாகிஸ்தானுக்கு இந்தியாவும் சவுதியும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறார்கள். முக்கியமாக சவுதியும் இதற்கு தலையாட்டி உள்ளது.

    பிறநாடுகள்

    பிறநாடுகள்

    சவுதியும் பிறநாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறியுள்ளது. ஆகவே காஷ்மீர் பிரச்சனையில் எதிர் வரும் காலங்களில் சவுதி தலையிட வாய்ப்பில்லை என்கிறார்கள். இதன் பொருள் காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை. அதை இந்தியா மட்டுமே பார்த்துக் கொள்ளும் என்பதாகும்.

    நீண்ட நாள் நண்பன்

    நீண்ட நாள் நண்பன்

    பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் இருந்த நெருங்கிய நண்பனாக சவுதி இருந்தது. காஷ்மீர் பிரச்சனையில் சவுதி இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் என்று பாகிஸ்தான் கனவு கண்டது. ஆனால் தற்போது சவுதி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவுடன் நெருங்க தொடங்கி விட்டது.

    English summary
    PM Modi in Saudi Arabia: PMO and Saudi Crown meet gives a hint about Pakistan and Kashmir issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X