For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவுதியோடு செம க்ளோஸ் ஆன இந்தியா.. மோடி - சல்மான் உருவாக்கிய புதிய கவுன்சில்.. என்ன சிறப்பு?

இந்தியா மற்றும் சவுதி இடையிலான உறவை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடி மற்றும் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான கூட்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    PM Modi arrives at King Saud Palace in Riyadh

    ரியாத்: இந்தியா மற்றும் சவுதி இடையிலான உறவை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடி மற்றும் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான கூட்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை சவுதி அரேபியா சென்றார். சவுதியில் நேற்று நடந்த வருடாந்திர உயர்மட்ட பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    அதேபோல் நேற்று பிரதமர் மோடி சவுதி அரசர் சல்மான் பின் அபிலாசிஸ் மற்றும் முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரை சந்தித்தார். அவர்களுடன் நேற்று சிறப்பு விருந்து சாப்பிட்டு பின் ஆலோசனையில் ஈடுப்பட்டார்.

    என்னோட மெஷின் பெரியது.. சுஜித் விழுந்த குழி குறுகலானது.. வருத்தமாக இருக்கிறது.. மதுரை மணிகண்டன்என்னோட மெஷின் பெரியது.. சுஜித் விழுந்த குழி குறுகலானது.. வருத்தமாக இருக்கிறது.. மதுரை மணிகண்டன்

    என்ன முடிவு

    என்ன முடிவு

    இந்த ஆலோசனையின் முடிவில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான கூட்டுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியும், சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் பிரச்சனைகள் குறித்து இந்த குழு ஆலோசனை நடத்தும்.

    குழு ஆலோசனை

    குழு ஆலோசனை

    இந்த குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலோசனை செய்யும். பிரதமர் மோடியும், முடி இளவரசர் முகமது பின் சல்மானும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இதில் ஆலோசனைகளை மேற்கொண்டு முக்கிய பிரச்சனைகளை சரி செய்வார்கள்.

    என்ன முக்கியம்

    என்ன முக்கியம்

    இந்த ஆலோசனையில் மூன்று முக்கியமான துறைகளில் நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. விவசாயம், எண்ணெய் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன்படி விவசாயத்தில் புதிய முதலீடுகள் செய்வது, சவுதியின் எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    ரு பே

    ரு பே

    இரண்டு நாடுகளுக்கு இடையிலான கடற்படை கூட்டு பயிற்சி இந்த வருடம் இறுதியில் நடக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஆன்லைன் பண பரிமாற்றம் செய்ய பயன்படும் ரு பே தற்போது சவுதியில் தொடங்கப்பட்டுள்ளது. சவுதியில் இருக்கும் இந்தியர்களின் வசதிக்காக அங்கு ரு பே தொடங்கப்பட்டுள்ளது.

    தீவிரவாதம்

    தீவிரவாதம்

    அதேபோல் இந்த ஆலோசனையில் தீவிரவாதம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆசியாவில் நிலவும் உள்நாட்டு தீவிரவாதத்தை ஓழிக்க இரண்டு நாடுகளும் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு பாதுகாப்பு ரீதியான அனைத்து உதவிகளையும் செய்வதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

    English summary
    PM Modi in Saudi Arabia: PMO and Saudi Crown prince form a Strategic Partnership Council to discuss on relationship.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X