For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பானில் பிரதமர் மோடி! சுசூகி உள்ளிட்ட முன்னணி தொழில்நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை!

Google Oneindia Tamil News

டோக்கியா: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி டோக்கியோவில் சுசூகி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசூகி உள்ளிட்ட முன்னணி தொழில்நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். அரசு முறைப் பயணமாக ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக, டோக்கியோவில் சுசூகி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசூகியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

PM Modi meets top business leaders in Japan

அப்போது, இந்திய வாகனத்துறையில் சுசூகி மோட்டார்ஸ் நிறுவனம் செய்து வரும் பங்களிப்புக்காக பாராட்டு தெரிவித்தார். நிலையான வளர்ச்சியை இலக்கை அடைவதற்கு மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளுக்கான உற்பத்தி வசதிகள் மற்றும் மறுசுழற்சி மையங்களை அமைப்பது இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அப்போது இருவரும் விவாதித்தனர். மேலும், திறன் மேம்பாடு படிப்புகள் மூலம் இந்தியாவில் உள்ளூர் கண்டுபிடிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது.

8 ஆண்டு பாஜக ஆட்சி.. இந்திய ஜனநாயகத்தை வலிமையாக மாற்றியுள்ளோம் - ஜப்பானில் பிரதமர் மோடி பெருமிதம் 8 ஆண்டு பாஜக ஆட்சி.. இந்திய ஜனநாயகத்தை வலிமையாக மாற்றியுள்ளோம் - ஜப்பானில் பிரதமர் மோடி பெருமிதம்

மேலும் ஜப்பான் நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் நிறுவனத்தின் தலைவர் நோபுஹிரோ எண்டோவை டோக்கியோவில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில், முக்கியமாக சென்னை - அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிடையேயும், கேரளாவின் கொச்சி - லட்சத்தீவுகளிடையேயும் அமைக்கப்பட்டு வரும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பணியில், என்இசி கார்ப்பரேஷன் அளித்து வரும் பங்களிப்பை வெகுவாக பாராட்டினார்.

தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து என்இசி கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார். வளர்ந்து வரும் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

PM Modi meets top business leaders in Japan

டோக்கியோவில் ஆடை நிறுவனமான யுனிக்லோவின் தாய் நிறுவனமான ஃபாஸ்ட் ரீடெய்லிங் கோ லிமிடெட்டின் தலைவர் மற்றும் செயல் அதிகாரியான திரு.தடாஷி யனாயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஜவுளி மற்றும் ஆடைச்சந்தை குறித்தும், இந்தியாவில் உள்ள ஜவுளி உற்பத்தி திட்டங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாகவும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் எளிதாக வணிகம் செய்யும் விதமாக, தொழில்துறை மேம்பாடுகள், உள்கட்டமைப்பு வசதி, வரிவிதிப்பு மற்றும் தொழிலாளர்கள் துறை உள்ளிட்டவற்றில் செயல்படுத்தப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் தொடர்பாக மோடி அப்போது எடுத்துரைத்தார். ஜவுளி உற்பத்தி மையமாக வளர்ந்து வரும் இந்தியாவின், பிரதம மந்திரி - மித்ரா திட்டத்தில் பங்கேற்குமாறு யுனிக்லோ நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

முன்னதாக ஜப்பான் பயணம் குறித்து, அந்நாட்டின் உள்ளுர் செய்தித்தாள் ஒன்றில் பிரதமர் மோடி எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் செய்தியில், "இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான துடிப்பான உறவுகள் குறித்து எழுதினேன். எங்களிடையேயான உறவு அமைதி, நிலைத்தன்மை, செழுமைக்கான கூட்டு. புகழ்மிக்க 70 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் எங்கள் நட்பின் பயணத்தை நான் கண்டறிந்துள்ளேன்.
கோவிடுக்கு பிந்தைய உலகில், இந்தியா, ஜப்பான் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக இருநாடுகளும் உள்ளன. இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் நிலையான, பாதுகாப்பான தூண்களாக இரண்டு நாடுகளும் உள்ளன. பல்வேறு துறைகளிலும் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன். குஜராத் முதல்வராக நான் இருந்த நாட்களிலிருந்தே ஜப்பானிய மக்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு தொடர்ச்சியாக கிடைத்துள்ளது. ஜப்பானின் முன்னேற்றங்களும், வளர்ச்சியும் எப்போதும் போற்றத்தக்கவை. தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, புதுமை, புதிய தொழில்கள் தொடங்குவது உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஜப்பான், இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi met NEC Corporation chairperson Dr Nobuhiro Endo, Uniqlo CEO Tadashi Yanai, Suzuki Motor Corporation Osamu Suzuki.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X