For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பான் மாணவர்களுக்கு புல்லாங்குழல் வாசித்து, கிருஷ்ணர் கதை சொன்ன மோடி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானிய பள்ளிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த குழந்தைகளுக்கு புல்லாங்குழல் வாசித்துக் காட்டி கிருஷ்ணர் கதையை சொல்லி அசத்தினார்.

4 நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று டோக்கியோ சென்றார். முன்னதாக, காலையில் வர்த்தக கூட்டமைப்பினர் மத்தியில் உரையாற்றினர்.

பின்னர், அந்நாட்டு கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக அங்குள்ள டைமெய் ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு அவர் சென்றார்.

PM Modi narrates story of Lord Krishna to kids at Japanese school

பிரதமர் மோடியை அங்கிருந்த மாணவர்கள் பாட்டுப்பாடி வரவேற்றனர். அவருக்காக இசைக்கருவிகள் பலவற்றை வாசித்தனர். அப்போது மோடி, அவர்கள் மத்தியில் நின்று கொண்டார். இசைக்குழுவில் இருந்த ஒரு குழந்தை புல்லாங்குழல் வாசிக்க அதனை மோடி மிகவும் ரசித்துக் கேட்டார்.

பின்னர் அந்த குழந்தைகளிடம், இசையால் விலங்குகளை வசப்படுத்த முடியும் என்றார். அதற்கு குழந்தைகள் எப்படி என கேட்கவே, கிருஷ்ணர் என்ற கடவுள் உண்டு. அவர், தனது புல்லாங்குழல் இசையால் பசுக்களை வசப்படுத்தி வைத்திருந்தார் என்றார். பின்னர், அவர் புல்லாங்குழலும் வாசித்துக் காட்டினார். மாணவர்கள் இதனை ரசித்துக் கேட்டனர்.

English summary
Prime Minister Narendra Modi Monday visited an elementary school here and mingled with the students, narrating them the story of Lord Krishna. Modi wanted to learn how the Japanese education system works and received a presentation in this regard at the Taimei Elementary School on the third day of his Japan visit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X