For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ம்ஹூம்.. உட்கார மாட்டேன்.. முதல்ல இதை தூக்குங்க.. ரஷ்யாவில் அதிரடி காட்டிய மோடி

ரஷ்யாவில் பிரதமர் மோடியின் எளிமை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : PM Modi refuses sofa| சோபாவில் உட்கார மறுத்த மோடி..வீடியோ

    மாஸ்கோ: "ம்ஹூம்.. உட்கார மாட்டேன்.. முதல்ல இதை தூக்குங்க.." என்ற பிரதமர் மோடியின் எளிமை.. ரஷ்யா முழுக்க பரவி வருகிறது.

    "இந்த நாட்டின் ஒரு ஏழை தாயின் மகன்.. 10 லட்சம் ரூபாய்க்கு கோட்-சூட் போட்டிருக்கிற ஒரு ஏழை தாயின் மகன்.. ஏழேகால் லட்சத்துக்கு கண்ணாடி போட்டிருக்கிற ஒரு ஏழைதாயின் மகன்.. ஒன்னே கால் லட்ச ரூபாய்க்கு பேனா வெச்சிருக்கிற ஏழை தாயின் மகன்.. ஓட்டு கேட்கிறார்" என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும் அளவுக்கு மோடியின் எளிமை பேசப்பட்டது.

    ஆனாலும், எப்போதுமே தன்னை ஒரு எளிமைவாதியாகவே மோடி முன்னிறுத்தி வருகிறார் என்று பாஜகவினர் பெருமிதம் கொள்கின்றனர். இப்போதும் அப்படிதான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    அரிவாளை எடுக்கிறார்.. சுட்டு பொசுக்குகிறார்.. தனுஷ் ரசிகர்களாம்.. 3 டிக் டாக் இளைஞர்களுக்கு வலை!அரிவாளை எடுக்கிறார்.. சுட்டு பொசுக்குகிறார்.. தனுஷ் ரசிகர்களாம்.. 3 டிக் டாக் இளைஞர்களுக்கு வலை!

    போட்டோ செஷன்

    போட்டோ செஷன்

    ரஷ்யாவின் விளாடிஸ்வோஸ்டாக் சென்றுள்ளார் மோடி. அங்கு அதிகாரிகளுடன் க்ரூப் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். ஒவ்வொரு அதிகாரிகளும் அந்த போட்டோ எடுக்க போகும் அறைக்கு வருகிறார்கள். அவர்களுக்காக வரிசையாக சேர் போடப்பட்டு உள்ளது.

    சோஃபா

    சோஃபா

    அதிகாரிகளுடன் நம் மோடியும் வருகிறார். ஆனால் மோடிக்கு மட்டும் ஒரு பெரிய குஷன் சேர் போடப்பட்டுள்ளது. விஐபிக்கள் உட்கார்ந்து பேசுவார்களே.. அந்த மாதிரியான குட்டி சோஃபா போல இருக்கிறது. அதில் ஒரு தலைகாணியும் வைக்கப்பட்டிருந்தது.

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    குழுவுடன் வந்த மோடி இந்த சோபாவை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டார். உட்காருங்கள் என்று அதிகாரிகள் கைகாட்டவும், ம்ஹூம் மாட்டேன்.. முதல்ல இதை எடுங்க.. எனக்கும் இவங்களுக்கு போட்ட மாதிரி சேர் எடுத்து போடுங்க என்று சொல்லி அந்த சோபாவில் உட்கார மறுக்கிறார்.

    எளிமை

    எளிமை

    இதையடுத்து மற்றவர்களுக்கு போட்ட மாதிரியே, பிரதமருக்கும் நார்மல் சேர் போடப்படுகிறது. அதில் மோடி உட்கார்ந்தபிறகே மற்ற ரஷ்ய அதிகாரிகள் உட்காருகிறார்கள். பிரதமரின் இந்த எளிமையை ரஷ்யர்கள் பாராட்டி வருகின்றனர். அத்துடன், இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

    English summary
    PM Modi refuses to sit on grand sofa during photo session in Russia and this Video goes Viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X