For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை ரஷ்யா செல்லும் மோடி.. ஆனால் உலகத்தின் பார்வை சென்னை மீது.. பின்னணி இதுதான்!

பிரதமர் மோடி நாளை ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : PM Modi trip to Russia

    மாஸ்கோ: பிரதமர் மோடி நாளை ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அவர் ரஷ்யா செல்ல இருக்கிறார்.

    பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரின் பிரான்ஸ் சுற்றுப்பயணம் அதிக முக்கியத்துவம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

    பிரான்ஸ் பயணத்தில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் பிரச்சனை நிலவி வருவதால் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது .

    தமிழகத்தை தாக்க வருகிறது 'தாமரை புயல்'.. நித்தம் நித்தம் சிக்கும் தலைகள் எத்தனையோ?தமிழகத்தை தாக்க வருகிறது 'தாமரை புயல்'.. நித்தம் நித்தம் சிக்கும் தலைகள் எத்தனையோ?

    ரஷ்யா செல்கிறார்

    ரஷ்யா செல்கிறார்

    இந்த நிலையில்தான் பிரதமர் மோடி நாளை ரஷ்யா செல்கிறார். இந்த பயணம் இரண்டு நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாளை காலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

    மூன்று விஷயங்கள்

    மூன்று விஷயங்கள்

    இந்த இந்த பயணத்தில் மூன்று முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது. முதல் விஷயம் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான பொருளாதார ஒப்பந்தங்கள். அதேபோல் இந்தியா ரஷ்யா ஆகிய நாடுகள் எரிசக்தி துறையில் புதிய ஒப்பந்தங்களை செய்யவும் திட்டமிட்டுள்ளது.

    என்ன சர்வதேசம்

    என்ன சர்வதேசம்

    அதேபோல் சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார தட்டுப்பாடு குறித்தும் ஆலோசிக்க இருக்கிறார்கள். கிழக்கு பொருளாதார மன்றம் சார்பாக நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். ரஷ்யாவின் முக்கியமான பொருளாதார ஆலோசகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    மிக முக்கியம்

    மிக முக்கியம்

    அதேபோல் காஷ்மீர் பிரச்சனை குறித்தும் இதில் மோடி பேச இருக்கிறார். காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு பிரச்சனை என்று ரஷ்யா ஏற்கனவே கூறிவிட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை என்ன

    சென்னை என்ன

    இந்தியா ரஷ்யா இடையே கடல் போக்குவரத்து மும்பை வழியாக செயிண்ட்ஸ் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கு செய்யப்பட்டு வருகிறது. இது 8500 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு அதிகம் ஆகும். இதற்கு பதிலாக விளாடிவோஸ்டோக் துறைமுகத்தில் இருந்து சென்னைக்கு போக்குவரத்தை தொடங்க ரஷ்யா திட்டமிடப்பட்டு வருகிறது.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இதன் தூரம் வெறும் 5600 நாட்டிக்கல் மைல்தான். இதனால் மும்பை கடல் போக்குவரத்தை கைவிட்டுவிட்டு சென்னை போக்குவரத்தை தொடங்க ரஷ்யா ஆலோசனை செய்து வருகிறது. இதைதான் தற்போது உலகமே உற்றுநோக்க தொடங்கி உள்ளது. இதனால் ரஷ்யா இந்தியா உறவு இன்னும் மேம்படும்.

    வேறு என்ன

    வேறு என்ன

    அதே சமயம் ரஷ்யாவிற்கான போக்குவரத்து செலவும் பெரிய அளவில் குறையும். அதேபோல் சென்னைக்கும் புதிய நிறுவனங்கள் வரும். வேலைவாய்ப்புகள் உருவாகும். இது தொடர்பான ஒப்பந்தங்கள் நாளை செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    PM Modi trip to Russia may open the gate of the new sea route to Chennai from Vladivostok.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X