For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூடான் தீவிபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

Google Oneindia Tamil News

Recommended Video

    சூடான் நாட்டு ஓடு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு

    கார்தும் (சூடான்): சூடான் நாட்டில் செராமிக் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கல் செய்தியில் கூறுகையில், சூடான் நாட்டில் செராமிக் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதை அறிவேன். அந்த விபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டனர்.

    PM Narendra Modi expresses condolences for Indian Workers who lost their lives in Sudan

    பலர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.

    சூடான் நாட்டில் இருக்கும் நமது இந்திய தூதரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறது என்றார். சூடான் தலைவகர் கார்துமில் செராமிக் ஓடுகள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த ஆலையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள், இந்தியர்கள் என ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலையில் நேற்று கேஸ் டேங்கர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    200-க்கும் அதிகமானோர் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் என மொத்தம் 23 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் ஏராளமானோர் காயமடைந்தனர். 6 தமிழர்கள் உயிரிழந்த செய்தியை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நமது தூதரகம் தொழிற்சாலை நிர்வாகத்துடன் தொடர்பிலிருக்கிறது. தூதரக ஊழியர்கள் விபத்து நடந்த இடத்தில் இருக்கின்றனர். நாங்கள், சூடான் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, உயிரிழந்தோரை விரைவாக அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

    English summary
    PM Narendra Modi in his tweet says that Anguished by the blast in a ceramic factory in Sudan, where some Indian workers have lost their lives and some are injured. My thoughts are with the bereaved families and prayers with the injured. Our Embassy is providing all possible assistance to those affected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X