For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நானும், அம்மாவும் இந்தியா திரும்பணும்.. அனுமதி கொடுங்க.. மோடிக்கு கடிதம் எழுதிய போலந்து சிறுமி

Google Oneindia Tamil News

வார்சா: நானும் அம்மாவும் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும். அதற்கு அனுமதி கொடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு போலந்து சிறுமி கடிதம் எழுதியுள்ளார்.

போலந்து நாட்டை சேர்ந்தவர் சிறுமி அலிக்ஜா வனாட்கோ(11). இவர் கோவாவில் தங்கி படித்துக் கொண்டிருந்தார். இவரது தாய் மார்ட்டா கோட்லார்ஸ்காவுடன் ஓவியராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார்.

இவர் மல்ட்டிபிள் என்ட்ரி பி2 விசா மூலம் தன் மகளை பார்க்க இந்தியாவுக்கு வந்தார். அப்போது தாயின் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்ததால் அவர் நாடு கடத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து சிறுமியை அழைத்து செல்ல நிபந்தனையுடன் கூடிய அனுமதி மார்ட்டாவுக்கு வழங்கப்பட்டது.

நேற்று அடி, உதை: இன்று தங்கை.. தலையில் கை வைத்து பெண் நிர்வாகியிடம் மன்னிப்பு கோரிய பாஜக எம்எல்ஏ! நேற்று அடி, உதை: இன்று தங்கை.. தலையில் கை வைத்து பெண் நிர்வாகியிடம் மன்னிப்பு கோரிய பாஜக எம்எல்ஏ!

சுஷ்மா ஸ்வராஜ்

அதன் பேரில் கோவாவில் இருந்த சிறுமியை அந்த தாய் அழைத்து கொண்டு கடந்த மார்ச் 24-ஆம் தேதி போலந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதமே அந்த சிறுமியின் தாய், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு தங்களை இந்தியாவுக்கு திரும்ப அனுமதிக்க அனுமதி கோரினார்.

உருக்கமான கடிதம்

உருக்கமான கடிதம்

ஆனால் இவரது கோரிக்கைக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தற்போது தாயும், மகளும் கம்போடியாவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அலிக்ஜா, இரண்டாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதை அடுத்து அவருக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.

வாழ்க்கை

வாழ்க்கை

அதில் அவர் கூறுகையில் விசா முடிந்தும் தங்கியதால் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் நாங்கள் இந்தியாவுக்கு நுழைய முடியாதபடி தடை செய்யப்படுவோர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளோம். தற்போது எனது தாயுடன் இருந்தாலும் நான் விரும்பும் நாட்டில் வாழ்ந்த வாழ்க்கையை என்னால் இங்கு வாழ முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

அமைச்சருக்கும் கடிதம்

அமைச்சருக்கும் கடிதம்

அது போல் அவரது தாயும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது மகளுக்கு கோவாவில் படித்த பள்ளித்தான் பிடித்திருக்கிறது. அடுத்த ஆண்டு பள்ளிக் கூடத்தை நினைத்து தற்போது அச்சப்படுவதாகவும் நீங்கள் உதவக் கூடியவர் என்பதால் எங்களை இந்தியாவுக்கு அனுமதிக்க வேண்டும் என கடவுளிடம் பிரார்த்திப்பதாக தாய் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இந்த கடிதங்கள் வெளியறவுத் துறை அமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள எஸ்.ஜெய்சங்கருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

English summary
11 Years Porish girl writes letter to PM Narendra Modi seeking her and her mom's return to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X