For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருடனை நாய் பிடிக்கும்.. நாயே திருடினா??... பிஸ்கட் திருடி கைதான யு.எஸ். நாய்!

Google Oneindia Tamil News

Dog
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சாமர்த்தியமாக திருடிய நாய் ஒன்று சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியால் கைது செய்யப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ளது கிளிண்டன் சூப்பர் மார்க்கெட். சமீபகாலமாக அங்கு சில நாய் உணவுப் பொருட்கள் மாயமாகி வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து அங்குப் பணியாற்றும் ஊழியர்கள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதித்துப் பார்த்துள்ளனர்.

கேமராவில் பதிவாகியிருந்தக் காட்சிகளைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் சூப்பர் மார்க்கெட்டு வாசலில் நிற்கும் வளர்ப்பு நாய் ஒன்று கதவு திறக்கும் வரை காத்திருப்பதும், கதவு திறந்தவுடன் உள்ளே நுழைந்து, நாய்களுக்கான உணவு பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நாய் மீது சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசாரும் திருட்டில் ஈடுபட்ட அந்த நாயைக் கைது செய்து கூண்டில் அடைத்துள்ளனர்.

அதன் பின்னர் நாய் மீதான குற்றச்சாட்டுகளை வற்புறுத்தப்போவதில்லை என்று முடிவு செய்த கடையின் உரிமையாளர்கள் நாயின் உரிமையாளரிடமே அதனை ஒப்படைக்க அனுமதி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த நாய் சிறிய எச்சரிக்கைக்கு பின்னர் அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்கப் பட்டது.

English summary
Staff at a general store thought they'd gone 'barking mad' when a serial shoplifter was revealed as crafty canine, Cato the husky dog. The shop workers had decided to check their CCTV after a spate of thefts at their general store in Clinton, South Carolina. But, they were surprised to find that it was a four-legged bandit who was responsible for their stock going walkies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X