For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

40 ஆண்டு சேவையை பாராட்டி இந்திய நர்ஸை கௌரவித்த அமீரக போலீசார்

By Siva
Google Oneindia Tamil News

அஜ்மான்: அமீரகத்தில் 40 ஆண்டுகளாக நர்ஸாக பணிபுரிந்து வரும் கேரளாவை சேர்ந்த மெர்சி சாண்டியை அஜ்மான் போலீசார் கௌரவித்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்தவர் மெர்சி சாண்டி(63). டெல்லியில் நர்ஸிங் படித்த அவரின் தந்தை அபுதாபியில் பணியாற்றினார். இதையடுத்து கடந்த 1976ம் ஆண்டு மெர்சி தனது தந்தையால் அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

8 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையின் பிரசவ வார்டில் அவர் நர்ஸாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் அல் ஜொஹ்ரா மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது அவர் ஷேக் கலிபா மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.

அவரது மூத்த மகள் பெஸ்ஸி(34) எமிரேட்ஸ் ஏர்லைனில் வேலை செய்கிறார். இளைய மகள் பெட்டி(31) இந்தியாவில் டாக்டராக உள்ளார். மெர்சியின் மகன் பிஜோய்(29) ஆஸ்திரேலியாவில் என்ஜினியரிங் முடித்துள்ளார்.

40 ஆண்டுகளாக பிரசவ வார்டு நர்ஸாக உள்ள மெர்சியின் சேவையை பாராட்டி அஜ்மான் போலீசார் அவரை கௌரவித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார் மெர்சி.

இது குறித்து மெர்சி கூறுகையில்,

நான் அமீரகத்திற்கு வந்த முதல் நான்கு ஆண்டுகள் அஜ்மானில் பணியாற்றினேன். 1980ம் ஆண்டு திருமணம் முடிந்த பிறகு கணவருடன் துபாய்க்கு சென்றேன். பின்னர் 1986ம் ஆண்டு நான் வேலை செய்த அஜ்மானுக்கே திரும்பி வந்துவிட்டோம். போலீசார் என்னை கௌரவித்ததை நினைத்து மகிழ்ச்சியில் கண்ணீர் வந்துவிட்டது என்றார்.

சர்வதேச செவிலியர் தின கொண்டாட்டத்தின்போது மெர்சி கௌரவிக்கப்பட்டார்.

English summary
Ajman police have honoured an Indian nurser for her 40 years of service in UAE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X