For Daily Alerts
Just In
மனைவியை கொன்று எரித்த போலீஸ் உயர் அதிகாரிக்கு மரண தண்டனை விதிப்பு
சீனா: சீனாவில் தனது மனைவியை கொன்று எரித்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
சீன - மங்கோலிய எல்லைப்பகுதியில் போலிஸ் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ஜாவோ லிபிங்க்.
இவர் ஊழல் செய்து பல லட்சம் டாலர்கள் சம்பாதித்தாக கூறப்படுகிறது. மேலும் சட்டவிரோதமாக வீட்டில் டெட்டனேட்டர் குச்சிகளையும் பதுக்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்த உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக கூறிய தனது மனைவியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்தி கொன்ற ஜாவோ லீபிங் அவரது உடலை அடையாளம் தெரியாத வகையில் எரித்துள்ளார்.
ஓராண்டாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து சீன நீதிமன்றம் ஜாவோ லீபிங்க்குக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.