For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சார்லி ஹெப்டோ பத்திரிக்கையாளர்கள் சாக வேண்டியவர்கள்: மிரள வைத்த 8 வயது சிறுவன்

By Siva
Google Oneindia Tamil News

பாரீஸ்: சார்லி ஹெப்டோ பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள். நான் தீவிரவாதிகளின் பக்கம் என்று பிரான்ஸைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்த 2 தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்திரிக்கை ஆசிரியர், 4 கார்டூனிஸ்டுகள் பலியாகினர். நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்டத்தற்கு பழிவாங்க இந்த தாக்குதலை நடத்தியதாக தீவிரவாதிகள் தெரிவித்தனர்.

Police Question Boy About Hebdo Attack

இந்நிலையில் பிரான்ஸில் உள்ள நைஸ் நகரில் இருக்கும் பள்ளியில் சார்லி ஹெப்டோ தாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். அப்போது 8 வயது முஸ்லீம் சிறுவன் அஞ்சலி செலுத்த மறுத்துவிட்டார்.

ஏன் என்று கேட்ட ஆசிரியரிடம் சிறுவன் கூறுகையில்,

நாம் பிரெஞ்சுக்காரர்களை கொலை செய்ய வேண்டும். நான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கிறேன். முஸ்லீம்கள் அருமையாக செயல்பட்டுள்ளனர். அந்த பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டு சட்டப்படி 13 வயதுக்குட்டப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்ட முடியாது. ஆனால் சிறுவனின் தந்தை பள்ளிக்கு வந்து பெற்றோர் சங்க தலைவரை மிரட்டியதால் பள்ளி தலைமை ஆசிரியர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சிறுவன் மற்றும் அவரின் தந்தையிடம் புதன்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர்.

English summary
A 8-year old boy surprised everyone by saying that Charlie Hebdo journalists deserved to die. France police questioned the boy and his father in connection with this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X