For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

34 பேர் பலியான பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்... 3 தீவிரவாதிகளின் புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ்

Google Oneindia Tamil News

புரூசெல்ஸ்: பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஸவன்டெம் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்தது. இதில், 34 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Police release image of Brussels bomb suspects wearing black glove on their left hand

உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாத இயக்கம் நடத்தியதாக அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து உலகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பெல்ஜியம் போலீசார், ஸவன்டெம் விமான நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த தீவிரவாதிகளின் உருவங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

அதன்படி, 3 இளைஞர்கள் தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைவது போன்ற புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்களில் இருவர் கைகளில் கருப்பு நிற கையுறை அணிந்தவாறு காணப்படுகின்றனர்.

இவர்களில் வலது பக்கத்தில் இருப்பவன் தப்பி ஓடிவிட்டதாகவும் அவனை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

English summary
Belgian police have released CCTV footage of three men suspected of carrying out the attack on a Brussels airport which left at least 14 dead and injured hundreds of others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X