For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டை மூடிய பனி.. பல வாரங்கள் தனியாக மாட்டிக் கொண்ட முதியவர்.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Google Oneindia Tamil News

ஒட்டாவா: கனடா நாட்டில் பனிகட்டிகளால் சூழப்பட்ட வீட்டிற்குள் சிக்கி தவித்த முதியவரை போலீசார் காப்பாற்றியுள்ளனர்.

கனடா நாட்டில் குளிர் காலம் தொடங்கியதில் இருந்தே, ஐஸ் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக ஒட்டாவா நகரில் எங்கு பார்த்தாலும், உறைபனி படர்ந்துகிடக்கிறது.

police rescue man trapped at home by snow in canada

சாலைகளில் இரண்டு மீட்டர் உயரத்திற்கு பனிகட்டி படர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் பனி புயல் ஒன்று வீசியது. இதனால் அவ்வப்போது இயல்பு நிலை பாதிக்கப்படுகிறது.

திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் போலீஸ்.. வீட்டை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஆணுறைகள்..! திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் போலீஸ்.. வீட்டை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஆணுறைகள்..!

இந்நிலையில் ஒட்டாவா நகரைச் சேர்ந்த சிலர் புளோரிடாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினர். அப்போது, அவர்கள் அருகில் இருந்த வீடு பனியால் மூடப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த இடத்துக்கு வந்த போலீசார், சுமார் இரண்டு மணி நேரம் போராடி பனிகட்டிகளை விலக்கி, வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

அப்போது அந்த வீட்டில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிக்கி இருந்தது தெரியவந்தது. வீட்டில் இருந்த உணவுப்பொருட்களை வைத்துக்கொண்டு அவர் அந்த பனி மூடிய வீட்டிற்குள் சில வாரங்களை கழித்திருக்கிறார்.

பின்னர் போலீசார் அந்த முதியவரை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தனர். அவருக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்பாடு செய்து தரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பனி மூடிய வீட்டிற்குள் முதியவர் ஒருவர் சில வாரங்கள் சிக்கியிருந்த செய்தி, ஒட்டாவா நகர் முழுவதும் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
Canada police rescued a old man, who was trapped at home for several weeks by snow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X