For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கல், பிசிபெலா பாத், தேங்காய் சட்டினி: அமெரிக்க சிஇஓக்களின் வயிற்றை குளிர வைக்கும் மோடி

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள வால்டார்ப் அஸ்டோரியா ஹோட்டலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச வரும் 47 அமெரிக்க சிஇஓக்களுக்காக இந்திய பாரம்பரியமிக்க உணவு வகைகள் சமைக்கப்பட உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இன்று காலை நியூயார்க் நகரை அடைந்தார். அவர் நியூயார்க்கில் உள்ள வால்டார்ப் அஸ்டோரியா ஹோட்டலில் தங்கியுள்ளார். ஹோட்டலுக்கு வந்த மோடிக்கு அங்கு கூடியிருந்த அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Pongal, coconut chutney, bisi bele bath and... Investments: PM Modi's Menu for US CEOs

இந்நிலையில் மோடி ஹோட்டலில் வைத்து 47 அமெரிக்க சிஇஓக்களை நாளை சந்தித்து பேசுகிறார். அவர் முதலீடு குறித்து சிஇஓக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரவு நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வரும் சிஇஓக்களுக்கு இந்திய பாரம்பரிய உணவு வகைகளை சமைத்துக் கொடுக்கிறார் பிரபல சமையல் கலைஞரான விகாஸ் கன்னா.

நியூயார்க்கில் ஜுனூன் என்ற ஹோட்டலை நடத்தி வரும் கன்னா பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர். நாளைய விருந்து உணவு பட்டியலில் பொங்கல், பிசிபெலாபாத், தேங்காய் சட்டினி, தன்டாய் சிக்கன், மிசோரம் கிச்சடி, மாம்பழ இஞ்சி சூப், தந்தூரி அன்னாசி, பன்னீர் ரவியோலி, பார்சி பத்ரானி மீன், தீபாவளி மிதாய், காரமெல் கஸ்டர்ட், ஏழைக்காய் பால் என பலவகை பரிமாறப்படுகின்றன.

போர்டு, லாக்ஹீட் மார்ட்டின், சிட்டி குழுமம், டுபாண்ட், கோல்ட்மேன் சாக்ஸ், பிளாக்ஸ்டோன், போயிங், கார்கில், ஸ்டார்வுட், பேபல், ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் சிஇஓக்கள் மோடியை சந்தித்து பேச உள்ளனர்.

English summary
Star chef Vikas Khanna is preparing varieties of Indian delicacies for the 47 top American CEOs who are going to meet PM Narendra Modi at Waldorf Astoria hotel in New York over dinner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X