For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு புனிதர் பட்டம்... போப்பாண்டவர் வழங்கினார்!

Google Oneindia Tamil News

வாடிகன் சிட்டி: வாடிகனில் இன்று நடைபெற்ற விழாவில் கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் மற்றும் ஒரு கன்னியாஸ்திரிக்கு போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ், புனிதர் பட்டம் வழங்கி உள்ளார்.

இந்த அரிய தருணத்தை எதிர்நோக்கி கேரளாவில் ஆயிரக்கமக்கான கிறிஸ்தவர்கள் காத்திருந்தார்கள். பாதிரியார் குரியகோஸ் சவரா மற்றும் கன்னியாஸ்திரி யூபிரேசியா ஆகியோருக்கே இன்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Pope Francis confers sainthood on two beatified candidates from Kerala at Vatican

இந்த நிகழ்வைத் தொடர்ந்து இன்று காலை முதலே கேரளாவில் உள்ள பல்வேறு சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலிகள் உள்ளிட்டவை நடந்து வந்தது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளில் குவிந்திருந்தனர். புனிதர் பட்டம் அளிக்கும் நிகழ்ச்சி சர்ச்சுகளில் நேரடியாக ஒளிபரப்புசெய்யப்பட்டது.

வாடிகனில் உள்ள புனித பீ்ட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இருவருக்கும் புனிதர் பட்டம் வழங்கி சிறப்பித்தார் போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ்.

English summary
Two beatified candidates from Kerala, Fr Kuriakose Elias Chavara and Sister Euphrasia, conferred as sainthood by Pope Francis at Vatican on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X