For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டைம் இதழ் 2013–ம் ஆண்டின் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நியூயார்க்: டைம் இதழின் 2013ம் ஆண்டின் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டைம் பத்திரிகை சார்பில் சிறந்த மனிதர் விருது பெறும் 3-வது போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆவார்

நியூயார்க்கில் இருந்து வெளிவரும் 'டைம்' பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சேவை புரிந்து பிரபலமானவர்களை தேர்வு செய்து வருகிறது.

டைம் பத்திரிகை வாசகர்கள் வாக்களித்து சிறந்த மனிதரை தேர்வு செய்து வருகிறார்கள். இந்த ஆண்டில் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வாடிகன் மகிழ்ச்சி

வாடிகன் மகிழ்ச்சி

"சர்வதேச அளவில் பெருமை வாய்ந்த ஒரு பத்திரிகை அவரை சிறந்த மனிதராக தேர்வு செய்து இருப்பது பெருமை அளிக்கிறது. என்று வாடிகன் செய்தி தொடர்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். புனிதமாகவும், மத நம்பிக்கையுடனும் இருந்து அமைதிக்கும், சிறந்த நீதிக்காகவும் பாடுபடும் ஒரு மனிதருக்கு கிடைத்த சிறந்த விருதாக இதை கருதுகிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூகத் தொண்டு

சமூகத் தொண்டு

போப் ஆண்டவராக பிரான்சிஸ் பதவி ஏற்ற கடந்த 9 மாதத்தில் அமைதிக்காக அவர் ஆற்றும் தொண்டுக்காகவும், இளைஞர்கள் பலரை நல்வழியில் மாற்றும் சக்தியாக விளங்குகிறார் என்பதாலும் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது.

மூன்றாவது போப்

மூன்றாவது போப்

டைம் பத்திரிகை சார்பில் சிறந்த மனிதர் விருது பெறும் 3-வது போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆவார். இதற்கு முன் 1994-ம் ஆண்டில் போப் ஜான் பால், 1962-ல் 23-ம் போப் ஜானும் டைம் பத்திரிகையின் சிறந்த மனிதர் விருது பெற்றுள்ளனர்.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டைம் வாசகர்கள் முதல் 10 இடத்தில் கூட அவரை தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Time magazine names Pope Francis its person of the year, saying that in nine months in office the head of the Catholic Church had become a new voice of conscience
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X