For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முஸ்லீம் அகதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்

By Siva
Google Oneindia Tamil News

ரோம்: புனித வியாழன் அன்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என 12 அகதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்டுள்ளார்.

ஏசு கிறிஸ்து உயிர் துறக்கும் முன்பு தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். அவர்களுக்கு சேவை செய்யும் வகையில் அவர் அவ்வாறு செய்தார். அதை நினைவுகூரும் வகையில் புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது.

Pope Francis washes feet of Muslim refugees

புனித வியாழன் அன்று போப் ஆண்டவர் 12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிடுவது வழக்கம். அதன்படி இத்தாலியின் ரோம் அருகே உள்ள அகதிகள் முகாமிற்கு சென்ற போப் பிரான்சிஸ் அங்கிருந்த 4 பெண்கள் உள்பட 12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிட்டார்.

அவர் 3 முஸ்லீம்கள், ஒரு இந்து அகதிகளின் பாதங்களையும் கழுவி முத்தமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அவர் கூறுகையில்,

முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒன்று தான். நாம் அனைவரும் சகோதரர்கள். இறைவனின் குழந்தைகள். நாம் அனைவரும் ஒன்றாக அமைதியாக வாழ விரும்புகிறோம் என்றார்.

English summary
Pope Francis washed and kissed feet of muslim, hindu and christian refugees at a migrant centre near Rome on maundy thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X