For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போப் ஆண்டவர் 2-ம் ஜான் பாலின் ரத்தத்தில் நனைக்கப் பட்ட ‘புனித பொருள்’ திருட்டு

Google Oneindia Tamil News

ரோம்: போப் ஆண்டவர் 2-ம் ஜான் பாலின் ரத்தத்தில் நனைக்கப் பட்ட புனிதத் துண்டை மர்ம நபர்கல் திருடிச் சென்றுள்ளனர்.

1978 அக்டோபர் முதல் 2005 ஏப்ரல் வரை போப் ஆண்டவராக இருந்தவர் 2-ம் ஜான் பால். இதுவரை இருந்த திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை, 1520 க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானது மற்றும் வரலாற்றில் நீண்ட காலம் போப்பாக இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர் எனப் பல சிறப்புகளைப் பெற்றவர் போப் 2-ம் ஜான் பால்.

இவரது ரத்தத்தில் நனைக்கப் பட்ட 'புனித துணித் துண்டொன்று' பெட்டியில் வைத்து பாதுகாக்கப் பட்டு வந்தது. தற்போது அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

புனிதப் பொருள்...

புனிதப் பொருள்...

மத்திய இத்தாலியின் அப்ரூஸோவில் சிறிய தேவாலயம் ஒன்றில் போப் ஆண்டவர் 2-ம் ஜான் பாலின் ரத்தத்தில் நனைக்கப் பட்ட புனிதத் துண்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

திருட்டு....

திருட்டு....

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று தேவாலயத்தை உடைத்த மர்மநபர்கள் அந்த புனிதப் பொருளை எடுத்துச் சென்று உள்ளனர்.

தீவிர விசாரணை....

தீவிர விசாரணை....

புனிதப் பொருளைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் யார்? எதற்காக திருடினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஓய்வு...

ஓய்வு...

போலந்து நாட்டை சேர்ந்த முன்னாள் போப் ஆண்ட்வர் ஜான் பால் அமைதியை விரும்பும் போதெல்லாம் இந்த மலைப்பிரதேசத்தில் சென்று ஒய்வெடுப்பார் என்பது குறிப்பிட தக்கது.

English summary
Italian police are hunting for a stolen holy relic that contains the blood of Pope John Paul ll..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X