For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்வழிப்படுத்துவதற்காக குழந்தைகளை அடிப்பது சரியே: போப் ஆண்டவர்

By Chakra
Google Oneindia Tamil News

வாடிகன்:குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காக பெற்றோர்கள் அவர்களை அடிப்பது சரியானதே என்று போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன.

வாடிகனில் நடைபெறும் பொது பார்வையாளர்கள் சந்திப்பில் இந்த வாரம் குடும்பம் மற்றும் தந்தையின் பங்கு குறித்து பேசிய போப், தவறுகளை மன்னிப்பதும் அதே நேரம் அவர்களை உறுதியோடு நல்வழிப்படுத்துவதுமே நல்ல தந்தைக்கான பண்பு என்றார்.

Pope says it's OK to spank children if you don't demean them

ஒரு முறை நான் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு குழந்தையின் தந்தை. அவர் என்னிடம், சில நேரங்களில் என் குழந்தை தவறு செய்யும் போது, அவனை நல்வழிப்படுத்துவதற்காக அடிக்கிறேன். ஆனால் அவன் முகத்தில் நான் அறைந்து அவனது தன்மானம் சிதறும்படி நடந்து கொள்வதில்லை என்றார்.

அந்த தந்தையின் செயலை நான் பாராட்டுகிறேன். எவ்வளவு அழகாக அந்த தந்தை தன் செயலை எடுத்துரைத்தார். அவருக்கு குழந்தையிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவும் தெரிந்திருக்கிறது, திருத்தவும் தெரிந்திருக்கிறது. குழந்தைகளை தண்டிக்கலாம் ஆனால் அது அவர்களை கேவலப்படுத்துவது போல இருக்கக் கூடாது என்றார்.

போப்பின் இந்த பேச்சிற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?

English summary
Pope Francis has stirred up a hornet's nest with remarks in which he said it's OK for parents to spank children, so long as they do it with dignity."I once heard at a wedding a father say, 'I sometimes have to hit my children a little but never in the face, so as to not demean them.' How nice, I thought, he has a sense of dignity," the Pope said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X