For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

9 மொழிகளில் டுவிட்டர் அக்கவுண்ட்: போப் பிரான்சிஸை பின்தொடரும் ஒரு கோடி பேர்

Google Oneindia Tamil News

வாடிகன்: டுவிட்டரில் போப் பிரான்சிஸை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின், 265வது போப் ஆண்டவராக பதவி வகித்த போப் 16ம் பெனடிக்ட் மூப்பு காரணமாக பதவி விலகினார். அதனையடுத்து அர்ஜென்டினாவின் முன்னாள் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ (76), 266-வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார்.

போப் பிரான்சிஸ் என்று அழைக்கப்படும் 266வது போப் கடந்தாண்டு டிசம்பரில் டுவிட்டர் சமூகவலை தளத்தில் இணைந்தார். போப் டுவிட்டரில் இணைந்து ஒரு வருடம் பூர்த்தியாக உள்ள நிலையில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

ஆய்வு...

ஆய்வு...

அமெரிக்காவிலிருந்து வெளிவரும், "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, "டுவிட்டர்' இணையதளத்தில், மிக அதிக ஆதரவாளர்களை கொண்டுள்ள பிரபலங்கள் குறித்து நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

ஜஸ்வின் பீபர், லேடி காகா....

ஜஸ்வின் பீபர், லேடி காகா....

மேலும், இந்த ஆய்வின் மூலம் பிரபல பாப் பாடகர்கள், ஜஸ்டின் பீபர், கேத்தி பெரி மற்றும் லேடி காகா ஆகியோர், 4 கோடிக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு அடுத்த இடத்தில், போப் பிரான்சிஸ் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

போப் அக்கவுண்ட்...

போப் அக்கவுண்ட்...

போப் பிரான்ஸிஸின் டுவிட்டர் கணக்கு @pontifex என்ற ஹேண்டிலுடன் செயல்பட்டு வருகிறது.

மிக்க மகிழ்ச்சி...

மிக்க மகிழ்ச்சி...

தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ள தகவல் அறிந்த போப் மகிழ்ச்சி தெரிவித்தார். இது தொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் அவர், " தற்போது 1 கோடிக்கும் அதிகமானவர்கள் இப்பக்கத்தைப் பின் தொடர்கிறீர்கள். இதற்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காகத் தொடர்ந்து பிரார்த்தியுங்கள்" என வெளியிட்டுள்ளார்.

9 மொழிகளில்....

9 மொழிகளில்....

போப் பிரான்ஸிஸ் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தனது டுவிட்டர் கணக்கைத் ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன், போர்சுகீஸ், அரபி, போலிஸ், லத்தீன் என 9 மொழிகளில் தொடங்கினார் .

ஆங்கிலத்தில் அதிகம்....

ஆங்கிலத்தில் அதிகம்....

அதிகபட்சமாக ஸ்பானிஷ் மொழியில் 40 லட்சம் பேரும், ஆங்கிலத்தில் 30 லட்சம் பேரும், இத்தாலி மொழியில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களும் போப்பை பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A jubilant Pope Francis celebrated reaching 10 million followers on messaging site Twitter on Sunday, a milestone in the Vatican's drive to spread the gospel through social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X