For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபேஸ்புக்கில் வரும் 'அந்த' லிங்கை கிளிக் செய்யாதீங்க: மீறினால் வைரஸ் தாக்கும்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: ஃபேஸ்புக்கில் பரவும் ஆபாச இணையதளம் சார்ந்த மால்வேரால் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஃபேஸ்புக்கில் ஆபாச இணையதளம் சார்ந்த மால்வேர் பரவி வருகிறது. அதாவது உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏதாவது ஒரு லிங்க் வரும். அதை நீங்கள் கிளிக் செய்தால் அதில் உள்ளவற்றை பார்க்க லேட்டஸ்ட் பிளாஷ் பிளேயரை டவுன்லோட் செய்யுமாறு வலியுறுத்தும். நீங்கள் பிளாஷ் பிளேயரை டவுன்லோடு செய்தால் உங்கள் கம்ப்யூட்டரை ட்ரோஜன் வைரஸ் தாக்கும்.

Porn-based malware on Facebook infects thousands of accounts in two days

அந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள முக்கிய தகவல்களை எடுத்துக் கொள்ளும். மேலும் ஃபேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் 20 பேரை டாக்(tag) செய்து அந்த வைரஸ் மால்வேர் லிங்கை போஸ்ட் செய்கிறது.

இப்படி ஒவ்வொரு முறையும் 20 பேருக்கு லிங்க் செல்வதால் இந்த வைரஸ் பல கம்ப்யூட்டர்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேரின் ஃபேஸ்புக் கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை குறித்து அறிந்து அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English summary
A porn-based malware in Facebook has affected over 1,10,000 accoounts in the past two days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X