For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம்- பானைகள் , ஆயுதங்கள், நாணயங்கள் கிடைத்தன

Google Oneindia Tamil News

பெஷாவர்: வடமேற்கு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு இந்து வழிபாட்டு தடயங்கள், பானைகள், நாணயங்கள் ஆகியவை கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இத்தாலி தொல்லியல் அறிஞர்களுடன் இணைந்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 3000 ஆண்டுகள் பழமையான பசீரா என்கிற நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Pots, Coins discovered in Pakistans 3000 year old city

இந்த அகழாய்வில் இந்து வழிபாட்டு முறை தடயங்கள், ஸ்தூபிகள், மண்பானைகள், நாணயங்கள், அந்த கால ஆயுதங்கள் ஆகியவை கிடைத்திருக்கின்றன. மாமன்னர் அலெக்சாண்டர் இப்பகுதியில் முகாமிட்டு எதிரிகளை தோற்கடித்திருக்கலாம் என ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

அதேநேரத்தில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதி சிந்து சமவெளி நாகரிகத்தின் தடயங்களாக ஊர்ப்பெயர்கள் இன்னமும் இருக்கின்றன என்பது தமிழக சிந்துவெளி ஆய்வாளர்களின் கருத்து. ஆதி தமிழர் வாழ்விடங்களில் எல்லாம் பானைகள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்விலும் பானைகள், நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

English summary
Pots and Coins were dicovered in Pakistan's 3000 year old City.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X