For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பவர்பேங்கால் பற்றி எரிய இருந்த விமானம்.. அதிர்ஷ்டவசமாக தீ அணைக்கப்பட்டது!

சீனாவின் உள்நாட்டு விமானத்தில் லக்கேஜில் இருந்த பவர்பேங்க் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    பவர்பேங்கில் பற்றிய தீ வீடியோ

    பீய்ஜிங் : சீனாவின் உள்நாட்டு விமானத்தின் பயணி ஒருவரின் லக்கேஜில் இருந்த பவர்பேங்க் புறப்படுவதற்கு சில மணி நேரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. விமான பணிப்பெண் துரிதமாக செயல்பட்டு தண்ணீர், ஜூஸ் ஊற்றி அணைத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    சீனாவின் தெற்கு ஏர்லைன் விமானம் ஷாங்காய் நோக்கி பயணிக்க தயாராகிக் கொண்டிருந்துள்ளது. விமானம் குவாங்சுவோல்நின்று கொண்டிருந்த போது அதில் பயணிகள் ஏறி தங்களது இருக்கைகளில் அமரத் தொடங்கியுள்ளனர்.

    அப்போது திடீரென பயணிகளின் லக்கேஜ் வைக்கும் இடத்தில் இருந்து புகை கிளம்பியுள்ளது. இதனைக் கண்டு பயணிகள் பீதியடைந்தனர்.

    துரிதமாக செயல்பட்ட ஏர்ஹோஸ்டஸ்

    துரிதமாக செயல்பட்ட ஏர்ஹோஸ்டஸ்

    பயணி ஒருவரின் பையில் இருந்த பவர்பேங்க் திடீரென தீப்பிடித்து எரிந்ததே தீ விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. தீயை பார்த்ததும் ஏர்ஹோஸ்டஸ் ஒருவர் துரிதமாக செயல்பட்டுஅருகில் இருந்த பயணியிடம் இருந்து தண்ணீர், ஜூஸ் உள்ளிட்டவற்றை எடுத்து அந்த தீயின் மீது ஊற்றியுள்ளார்.

    வைரலாகும் வீடியோ

    வைரலாகும் வீடியோ

    இதனையடுத்து தீ உடனடியாக அணைக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வெளிவரும் பீப்பிள்ஸ் டெய்லி என்ற செய்தி நிறுவனம் பிளைட்டில் பவர் பேங்க் இருந்த பை பற்றி எரியும் வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தீ தடுப்பு கருவிகள் இல்லையா?

    தீ தடுப்பு கருவிகள் இல்லையா?

    பவர்பேங்க் செயல்பாட்டில் இல்லாததால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதும் தண்ணீர், ஜூஸ் ஊற்றி அணைக்கும் அளவிற்கு தான் தீத்தடுப்பு வசதிகள் இருந்தனவா என்று பயணிகள் கொந்தளிக்கின்றனர்.

    கொச்சின் விமான நிலையத்தின் தடை

    கொச்சின் விமான நிலையத்தின் தடை

    பிராண்டட் அல்லாத பவர்பேங்குகளை பயன்படுத்த அண்மையில் கொச்சின் விமான நிலையம் தடை விதித்தது. இந்த தரமற்ற பவர்பேங்குகளை வைத்து எளிதில் வெடிக்கச் செய்ய முடியும் என்பதால் முன் எச்சரிக்கை கருதி இந்த தடையை விமான நிலையம் கொண்டு வந்தது. இந்நிலையில் சீனாவில் விமானத்தில் பவர்பேங்க் பற்றி எரிந்துள்ள சம்பவம் பவர்பேங்குகள் விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.

    English summary
    A domestic flight in China facced danger when a power bank kept in the overhead compartment caught fire. But luckily the airhostess come into sudden action by pouring water and juice to the fire to put off it saved many lives.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X